மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் திட்டமிட்டவாறு வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடை பெறவுள்ளதாக மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை மத்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. பொறுப்புடைய அதிகாரிகள் போதுமான நேரங்களை எடுத்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 14 பக்கங்கள் கொண்ட அந்த சுற்றறிக்கையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த வேண்டும், அதற்கு எந்தெந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எந்தெந்த மட்டங்களில் அவை நடத்தப்பட வேண்டும், எவ்வாறு அதற்கான ஊழியர்களை தயார்படுத்த வேண்டும் போன்ற விவரங்கள் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.