மக்களின் துயர் துடைப்போம்

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை மிரட்டிவந்த நிவர் புயல் கடலூருக்கும்  மரக்காணத்திற்கும் இடையில் கரையை கடந்தது.  அதன்   விளைவாக தமிழகத்தின் 16 மாவட்டங்களில் பெய்த  பலத்த மழையின் காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. பல்வேறு நீர் நிலைகளும் ஆறு குளங்களும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்தும் மழை நீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

பொதுமக்கள் பல்வேறு துயரங்களுடன் அல்லல்படுகின்றனர். அரசு தனது பங்கிற்கு பொதுமக்களை பள்ளிகளில், முகாம்களில் தங்கவைத்து பாதுகாக்கிறது. பொதுமக்களாகிய நமக்கும் இந்த இக்கட்டான வேளையில் மிகப்பெரிய இருக்கிறது. நாம்  நமது நண்பர்கள், உறவினர்களை பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர உதவ வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி அன்பர்களும் தொண்டுள்ளம் கொண்ட நண்பர்களும்  சேவைமனப்பான்மையுடன் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் வெள்ளநீர் புகுந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவும் தங்க இடம் ஏற்பாடு செய்து கொடுத்தும் சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றியும் வருகிறார்கள். அவர்களோடு  இந்தப் பணியில் நாமும் இணைவோம். பொதுமக்களின் துயர் துடைத்து மக்கள் சேவையில் ஈடுபடுவோம்.