மகான்களின் வாழ்வில்; ஐயப்பனின் ஐயம்

அப்பய்ய தீட்சிதர், வேலூர் மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் இருக்கும் அடையபலம், என்ற கிராமத்தில் 16ம் நூற்றாண்டில் தோன்றியவர். சிறந்த புலவர். அவர் ஊர் ஊராகச் சென்று பல தலங்களைத் தரிசித்து வந்தார்.
ஒருநாள், ஒரு ஊரில் உள்ள ஐய்யப்பன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்குள்ள ஐய்யப்பன் தனது மூக்கின் மேல் விரலை வைத்து ஏதோ சிந்தனையில் இருப்பதுபோல் வித்தியாசமாகக் காட்சி அளித்தார். இதற்கான காரணம் பற்றி தீட்சிதர் அந்த ஊர்ப் பெரியவர்களிடம் விசாரித்தார். அப்போது ஊர்ப் பெரியவர்கள் இங்கு ஒரு பெரிய மகான் வருகை தரும்போது அதற்கான காரணத்தைச் சொன்னால் சாஸ்தா மூக்கிலிருந்து விரலை எடுத்து விடுவார் என்று பரம்பரை பரம்பரையாகச் சொல்லி வருகின்றனர்” என்று கூறினர்.
அதனைக் கேட்ட தீட்சிதர், பார்வதியை நான் அம்மா என்று கூப்பிடுவேன். Ayyappansஅப்பாவின் மனைவிகள் அனைவரும் எனக்கு அம்மா அல்லவா? அதனால் பார்வதியை நான் அம்மா என அழைக்கலாம். ஆனால், லட்சுமி தேவியை நான் என்ன பெயர் சொல்லி அழைப்பேன்? விஷ்ணு, மோகினியாக அவதரித்தபோது அவருக்கும் சிவனுக்கும் மகனாக நான் பிறந்தேன்.

அதனால், மோகினியாக வந்த விஷ்ணுவை அம்மா என அழைக்கலாம். ஆனால் விஷ்ணுவின் மனைவி லட்சுமியை என்ன சொல்லி அழைப்பேன்?” என்ற பொருள்பட ஒரு சுலோகத்தைக் கூறினார். அந்த சுலோகம் சொன்னவுடனேயே ஐய்யப்பன் மூக்கிலிருந்து விரலை எடுத்துவிட்டார்.
தனது பக்தர்களின் பெருமையை உலகறியச் செய்ய பகவானின் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ உண்டு.

 

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்