ஏழிலைக் கிழங்கு என்ற கப்பக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, கூர்க்கன் கிழங்கு, மாகாளிக்கிழங்கு ஆகிய இந்த ஏழு கிழங்குகளும் வானவில் கிழங்குகளாக மிளிர்கின்றன. மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி என்றழைக்கப்படுகிறது. மலைவாழ் மக்களின் உணவுப்பட்டியலில் மாகாளிக்கிழங்குக்கு முக்கிய இடம் உள்ளது. மாகாளிக்கிழங்கு தென்னிந்தியா முழுவதிலும் உள்ள மலைப்பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. மாகாளி கிழங்கின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறியவையாக உள்ளன. ஆனால் கண்ணுக்கு விருந்து படைக்கும் வகையில் இந்த மலர்கள் திகழ்கின்றன.
மலைவாழ் மக்களின் ஆரோக்கியத்திற்கு இயற்கை யோடு இணக்கமாக அவர்கள் வாழ்வது தான் பிரதான காரணம். பஞ்ச பூதங்களும் மாசுபடாமல் உள்ள சூழ்நிலை அவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது.
மாகாளிக்கிழங்கு வேர்வகையைச் சேர்ந்த அருமையான தாவரம் என்பதால் ஆயுர்வேத மருத்துவத்தில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ரத்தக்கட்டு வாதம், காயம், ரத்தசோகை மஞ்சள் காமாலை, ஆகியவற்றுக்கான மருந்துகளுடன் இது சேர்க்கப்படுகிறது. சரும ஒவ்வாமைக்கான மருந்தாகவும் மாகாளிக்கிழங்கை பரிந்துரைக்கின்றனர். இதிலுள்ள குறிப்பிட்ட சில வேதிப்பொருட்கள் மூட்டு வலி உள்ளிட்ட உபாதைகளை விரட்டியடிக்கின்றன.
மாகாளிக்கிழங்கு நச்சுகளை அடியோடு நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. உடலுக்கு ஊட்டத்தையும் உள்ளத்துக்கு உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய இயல்பு மாகாளிக்கிழங்குக்கு உள்ளதால் ஏதேனும் ஒருவகையில் இதை மலைவாழ் மக்கள் தினந்தோறும் பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு வகைகளில் மாகாளிக்கிழங்கு பயன் படுத்துப்பட்டு வந்தபோதிலும் எல்லா வற்றுக்கும் சிகரமாகத் திகழ்வது மாகாளி ஊறுகாய்தான். சரியான பக்குவத்தில் ஊறுகாயைப் போட்டு காற்றோட்டமான இடத்தில் உலரவைக்கவேண்டும். நிழலிலும் இதை உளர்த்தலாம். சுமார் பத்து நாள் காய்ந்ததும் சுவையான ஊறுகாய் தயாராகி விடும். மாகாளிக்கிழங்கு ஊறுகாயில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றையும் பயன் படுத்துகின்றனர். இதனால் சுவையும் அதிகரிக்கின்றது.
குடத்திலிட்ட விளக்காக இருந்த மாகா ளிக்கிழங்கின் அருமைகளும் பெருமை களும் இப்போது குன்றின் மேலிட்ட விளக்காக ஜொலிக்கத் தொடங்கிவிட்டன. இதனால் மாகாளிக்கிழங்குக்கான தேவை அதி கரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் இதை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். இதை ஈடுகட்டும் வகையில் மாகாளிக்கிழங்கு சேகரிப்பில் கூடுதல் முக்கியத்துவம் காட்டினால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை மேலும் மேன்மையுறும்.