போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை: தலைமை நீதிபதி சந்திரசூட்

வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து சந்திரசூட் கூறியிருப்பதாவது: போலியான செய்திகளால் வன்முறை ஏற்படுவதை செய்தியாக நாம் தினந்தோறும் படித்து வருகிறோம். இணையதளங்கள் வாயிலாக பரவும் போலி செய்திகளை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தேர்தல்கள் மற்றும் சமூகங்களை போலி செய்திகள் சீர்குலைக்கின்றன. நாடு சோகமான கோவிட் தொற்றுநோயை எதிர் கொண்டபோது, ​​இணையதளம் போலி செய்திகள் மற்றும் வதந்திகளால் நிறைந்திருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. வேகமாக பரப்பப்படும் பொய் செய்திகள், உண்மையான தகவல்களை நீர்த்துப்போகச் செய்து விடுகிறது. இணையத்தில் பொய்ச் செய்திகள் பரவி வரும் காலகட்டத்தில் பேச்சு சுதந்திரத்தை நிர்வகிக்க புதிய கோட்பாடுகள் தேவைப்படுகிறது. அரசிற்கு எதிராக சிலர் தங்கள் கருத்து சுதந்திரத்தை விரிவுபடுத்த பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்களை நம்பியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.