பொது மக்கள் அச்சமடைய தேவையில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

நேற்று முன்தினம் இரவு தாம்பரம் அரசு நெஞ்சக மருத்துவமனை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, சென்னை அரசு பொது மருத்துவமனையில் வைரஸ் தடுப்பு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர், அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளை பார்வையிட்டார். இதேபோல, சென்னை விமான நிலையம், தாம்பரம் ரயில் நிலையத்தில் வைரஸ் தடுப்பு பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ் உடன் இருந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், “இந்த கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக கரோனாவாக இருக்குமோ என்று அச்சமடையத் தேவையில்லை. எல்லா காய்ச்சலும், இருமலும் கரோனாவுக்கான அறிகுறி இல்லை