தசரா பண்டிகையையொட்டி, டில்லியில் நேற்று நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில், ராவணன் உள்ளிட்டோரின் உருவபொம்மைகள் எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது: நவராத்திரியின்போது, பெண் தெய்வங்களை நாம் வழிபடுகிறோம். இந்த உணர்வை, தங்களுடைய வாழ்க்கையிலும் தொடர வேண்டும்.
பெண்களுக்கு அவர்களுக்கான உரிமைகள், அதிகாரங்கள் கிடைப்பதுடன், அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். அவர்களுடைய கவுரவத்தை பாதுகாக்க வேண்டும். மஹாத்மா காந்தியின், 150வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில், உணவுப் பொருட்களை வீணடிக்கக் கூடாது, எரிசக்தியை மற்றும் தண்ணீரை சேமிக்க வேண்டும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று உறுதி ஏற்று, இயக்கமாக செயல்படுத்த வேண்டும்.
பண்டிகைகள் நமது நாட்டில் மிகவும் முக்கியமான நிகழ்வுகள். வரும் தீபாவளி பண்டிகையின்போது, உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய, ஊக்கமளிக்கும், சாதனை புரிந்த பெண் குழந்தைகளை கவுரவிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.