சீனா தன் நாட்டு தயாரிப்பான ‘சினோவாக்’ கொரோனா தடுப்பூசியை வங்காள தேசத்திற்கு கொடுப்பதாக கூறியது. பிறகு மருந்து கண்டுபிடிப்பிற்கான செலவை பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டது. தங்களை சிக்க வைக்கும் சீனாவின் முயற்சியை உணர்ந்த வங்காள தேசம், பாரததத்டம் கொரோனா தடுப்பு மருந்தை கோரியது. ‘மைத்ரி தடுப்பூசி’ திட்டத்தின் கீழ் பாரதமும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதனால் சீன அரசின் ஊதுகுழலான ‘குளோபல் டைம்ஸ்’ சினோவாக் தடுப்பூசி சோதனையை நிறுத்த பாரதம் முயற்சிப்பதாக புலம்பி வருகிறது.