ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜே.என்.யு) மொழி, இலக்கியம் மற்றும் கலாச்சார ஆய்வுகள் துறை மற்றும் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றம் இணைந்து சமீபத்தில் நடத்திய புத்தக வெளியீட்டு விழாவில் தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு மன்றத்தின் (பேன்ஸ்) புரவலர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு உறுப்பினருமான இந்திரேஷ் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ‘ஹிமாலயா ஹிந்த் மகாசாகர் ராஷ்ட்ர சமூஹ்: ரீவைட்டலைசிங் தி கல்ச்சர் & மெரிடைம் டிரேட் ரிலேஷன்ஸ்’ என்ற புத்தகம் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில், பாரதத்துக்கான அஜர்பைஜான் குடியரசின் தூதர் டாக்டர் அஷ்ரஃப் ஷிகாலியேவ், தஜிகிஸ்தான் தூதர் லுக்மான் போபோகலோன்சோடா, ஆஃப்கானிஸ்தானின் தூதர் ஃபரித் மாமுண்ட்சாய், உஸ்பெகிஸ்தானின் தூதர் அகதோவ் தில்ஷாத், ஈரான் பாரசீக ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர். முமின் சென், தைபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையத்தின் துணைப் பிரதிநிதி கியாரி டோல்மா, மத்திய சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணைய உறுப்பினர் பேராசிரியர். ஷாஹித் அக்தர், ஜே.என்.யு துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், மதுரா சமஸ்கிருதி பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர். சச்சின் குப்தா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இமயமலை மற்றும் இந்தியப் பெருங்கடலின் கீழ் வரும் 54 நாடுகளின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.