கேரளா, கோழிக்கோடு மாவட்டத்தில், கேசரி மீடியா ஸ்டடீஸ் & ரிஸர்ச் சென்டரை துவக்கி வைத்த பின் அங்கு பி.எம் ஹரிஷங்கர் எழுதிய ‘கலாச்சார பயங்கரவாதம்’ எனும் நூலை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் வெளியிட்டார். இந்த புத்தகத்தில், கிறிஸ்தவ மிஷனரியின் தொண்டு நிறுவனங்களால் செயல்களால் பாரதம், வெளிநாட்டு கலாச்சாரங்கள் எப்படி பாதிக்கப்பட்டன, ஆரியர்கள் வெளிநாடுகளில் இருந்து பாரதம் வரவில்லை என்பதை நிரூபிக்கும் உண்மைகள், வரலாறு, தொல்பொருள் சான்றுகளை சீர்குலைப்பதில் கம்யூனிச, கிறிஸ்தவ பங்குகள், முஸ்லிம், கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்ட பண்டைய கலாச்சாரங்கள் போன்ற 21 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.