பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றது. மகா கூட்டணி 110 இடங்களிலும், பிற கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பாஜக 74 தொகுதிகளிலும், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இக்கூட்டணியில் உள்ள உள்ள இதர கட்சிகள் தலா 4 தொகுதிகளில் வென்றுள்ளன. இதன் மூலம் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான கூட்டணிக்கு 125 தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது.
மகா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 75 தொகுதிகளும், காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இது தவிர கூட்டணியில் உள்ள இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.