பி.எப்.ஐ அமைப்பின் சீன தொடர்பு

அமலாக்க இயக்குனரகம், சிறப்பு நீதிமன்றத்தில் (PMLA) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது மற்றும் சட்டவிரோத பணப் பறிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சி.ஏ.ஏவுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள், டெல்லி கலவரத்தின்போது சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டுதல் மற்றும் பாபர் மசூதி தொடர்பான சுவரொட்டிகளை உருவாக்குதல், என்.ஆர்.சி மற்றும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக மக்களைத் தூண்டுதல் ஆகியவற்றில் பி.எப்.ஐ’யின் முக்கிய பங்கு உள்ளது என்று கூறியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், பி.எப்.ஐ உறுப்பினர் கே.ஏ. ரவூப் ஷெரிப் சீனாவுடன் தொடர்பில் உள்ளவர் என்பதுடன் ஹத்ராஸ் வழக்கிலும் தொடர்புடையவர். முகக்கவசம் வர்த்தகம் என்ற போர்வையில் சீனாவிடம் இருந்து ரவூப் ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார். ரவூப் ஓமன் நாட்டில் உள்ள ரேஸ் இன்டர்நேஷனல் எல்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ரேஸ் இன்டர்நேஷனலில் நான்கு இயக்குநர்களில் இருவர் சீனர்கள் மற்றும் இருவர் கேரளாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ’கள். ரவுஃப் 2019, 2020களில் சீனாவுக்குச் சென்று தனது இந்திய வங்கிக் கணக்கில் பணத்தைப் பெற்றார். டெல்லியைச் சேர்ந்த கேரளப் பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் மூவரின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராஸ் பயணத்திற்கு ரவூப் ஷெரிப் நிதியளித்துள்ளார்.

மற்றொரு வழக்கில், ஜம்ப் மன்கி ப்ரோமோஷன்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற சீன நிறுவனத்திடமிருந்து எஸ்.டி.பி.ஐ (பிஎஃப்ஐயின் சகோதர அமைப்பு) கலீம் பாஷா ரூ. 5 லட்சம் பெற்றார்.  இந்த பாஷா பெங்களூரு கலவரத்தில் ஈடுபட்டவர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் நிதி திரட்டுவதற்காக பி.எப்.ஐ மாவட்ட செயற்குழுக்களை அங்கு அமைத்துள்ளது. அவர்கள் பணத்தைச் சேகரிக்க இலக்குகள் கொடுக்கப்படுகின்றன. அதை அவர்கள் ஹவாலா மூலமாகவோ அல்லது உருமறைப்பு வணிகப் பரிவர்த்தனைகள் மூலமாகவோ இங்கு மாற்றுவார்கள்.

அமலாக்கத்துறை, இந்த விசாரணையின் போது 600க்கும் மேற்பட்ட உள்நாட்டு பங்களிப்பாளர்கள் மற்றும் அவர்களின் வங்கி கணக்குகளையும் 2,600க்கும் மேற்பட்ட பயனாளிகளின் கணக்குகளையும் ஆய்வு செய்தது. இந்தக் கணக்குகளில் பல போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தின் பயனாளிகளில் ஒருவர் அன்ஷாத் பஸுதீன். அவர், ஐ.இ.டி வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கி, தோட்டாக்களுடன் உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். இவருக்கு பி.எப்.ஐ கணக்கில் இருந்து ரூ. 3.5 லட்சம் அனுப்பப்பட்டு உள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் பி.எப்.ஐ  ஈடுபட்டதை இது காட்டுகிறது.

பி.எப்.ஐ வளைகுடா நாடுகளில் பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. யூனிட்டி ஹவுஸ், காலிகட் ஹவுஸில் நடத்திய சோதனைகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. அபுதாபி, குவைத் மற்றும் ஜெட்டாவில் மட்டும் பி.எப்.ஐ சுமார் 1,800 முதல் 2,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

பி.எப்.ஐ அமைப்பு, “ஹிட் ஸ்குவாட்” ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இந்த குழுக்கள் பாரதத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டவை.

பி.எப்.ஐ தலைவர்களில் ஒருவரான அப்துல் ரசாக் மீதான தேடுதல் நடவடிக்கையின் போது, ​​151 விதமான எதிர்ப்பு ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. சின்னங்களை அணிவது எதிர்ப்பின் ஒரு வழியாக குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் போராட்டங்களுடன் இதை தெளிவாக இணைக்க முடியும்.

செய்தி ஆதாரம்: https://vskbharat.com/popular-front-raised-funds-from-china-involved-in-terror-funding-and-delhi-riots-enforcement-directorate/?lang=en)