பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்குடன், பிரதமர் மோடி தொலைபேசி உரை

பிரிட்டன் பிரதமருடன், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது பிரதமர் மோடி மற்றும் சுனாக் இருவரும் பரஸ்பரம், இரு நாடுகளிடையே நட்புறவை வலுப்படுத்தும் விதமாக தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் , பிராந்திய ஒத்துழைப்பு, மற்றும் உலகளாவிய முன்னேற்றம் உள்ளிட்ட பங்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

முன்னதாக இரு நாட்டு பிரதமர்களும் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனாக்குடனான உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது ‛‛எக்ஸ் ” வலைதளத்தில் பதிவேற்றினார்.