இந்த நாடு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சித்தாந்தத்தைச் சேர்ந்தது அல்ல. இது 125 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. ஒவ்வொரு தனி நபரின் பெரும் முயற்சியினால் மட்டுமே வல்லரசாக முடியும். நாட்டை பாதிக்கும் செயலுக்கு எதிராக போராட சமூகத்தின் ஒவ்வொரு தனி நபரும் முக்கிய பங்கை வகிக்க வேண்டும் என கூறினார்
நாட்டின் வளமான பொருளாதாரம் அமைவதற்கு பொறுப்பான குடிமக்கள் சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார கனவை நனவாக்க அனைவரும் ஒவ்வொரு திசையில் இருந்தும் பங்களிப்பை அளிக்க வேண்டும் . இவ்வாறு கூறினார்.
சிஏஏ குறித்து கருத்து கூறிய அவர் தேசிய நல்லிணக்கத்தை தடுக்கும் நோக்கத்துடன் தேச விரோத சக்திகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன என்றார். நாட்டிற்கு வெளியில் இருந்து சீர் குலைக்கும் சக்திகள் இந்தியாவை ஒரு போதும் பொருளாதார சமூக அரசியல் மற்றும் மத ரீதியாக நிலையானதாக இருக்க விரும்பாது. சீர்குலைக்கும் சக்தி காரணமாக நமது பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.