2020 ஏப்ரல் மாதம் 16ந் தேதி மகாராஷ்ட்ர மாநிலம் மும்பைக்கு அருகில் உள்ள பால்கர் எனுமிடத்தில் இரண்டு இந்து சாதுக்களையும், அவர்கள் வந்த வாகனத்தின் ஓட்டுநர் ஒருவரையும், 200 பேர்கள் கொண்ட கும்பல் தாக்கி மூவரையும் அடித்துக் கொன்றுள்ளார்கள். இது பற்றி எந்த ஊடகமும், தினசரி நாளிதழும் கண்டு கொள்ளவில்லை. இந்த கொலையின் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளும், இடதுசாரி கம்யூனிஸ்ட்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதை கூட காவல் துறையினர் தெரிந்தும் தெரியாமல் கண் மூடி இருக்கிறார்கள். இது பற்றிய ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மகாராஷ்ட்ர மாநில உள்துறை அமைச்சர், இந்த சம்பவத்தின் காரணமாக கைது செய்யப்பட்ட 100 பேர்களில், ஒரு முஸ்லிம் கூட கைது செய்யப்படவில்லை என கொலையின் திசை திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொலையில் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என எவரும் கூறாத போது, மாநில அமைச்சர் தன்னிச்சையாக விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பதை பற்றிய முழு ஆய்வு செய்தால், மாநில அரசு தனது தவறை மூடி மறைக்க முயலுவதாகவே தெரிகிறது. இடதுசாரி தீவிரவாதிகளுக்கும், கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும் உள்ள உறவை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது பால்கர் சம்பவம். குஜராத் மாநிலத்தில் சூரத் பகுதியில் உள்ள Sri Mahant Ramgiriji என்ற சாதுவின் இறுதி சடங்கிற்கு காரில் சென்ற போது, பால்கர் பகுதியில் காரை நிறுத்தி, காருக்குள் இருந்த சுஷில் கிரி மகராஜ், மகராஜ் கல்பவரிஷ கிரி என்ற இரு சாதுக்களையும், கார் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் என்பவரையும், 200 பேர்கள் கொண்டு கும்பல் கடுமையாக தாக்கி கொன்றுள்ளார்கள்.
இதில் வேடிக்கையானது, காவல் துறையினர் முன்னிலையில் இந்த காட்டுமிராண்டித்தானமான செயல் நடந்துள்ளது. குழந்தை திருடர்கள் என நினைத்து கும்பல் தாக்குதல்களை நடத்தியது என காவல்துறையின் கூறியது, இது கையாளாகாத செயல்பாடு என விமர்சனம் எழுந்துள்ளது. இது பற்றி பத்திரிக்கையாளர் ஒருவர் கூறும் போது, இச்சம்பவம் நடப்பதற்கு நான்கு தினங்களுக்கு முன், இதே இடத்தில் ஒரு மருத்துவர் உள்ளிட்ட நான்கு காவலர்கள் என ஐந்து பேர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தாக்கப்படுவதற்கும், காவல் துறை கூறிய குழந்தை திருட்டு என்ற கதையை கூறினார்கள். உண்மையில் பால்கர் பகுதியில் நடப்பது என்ன என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
பால்கர் பகுதி நக்ஸல்கள் நிறைந்த பகுதி. இங்கு மத மாற்றம் என்பது கடந்த 15 வருடங்களாக நடந்து வருகிறது. இங்கு வாழும் பழங்குடியினத்தவர்களை கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு என சர்ச்களும், கிறிஸ்துவ மிஷனரிகள் அதிக அளவில் தோன்றி மத மாற்ற வேலையை செய்து வருகிறார்கள். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் தீட்சித் கூறுகையில், “இப்பகுதி ஒரு மாவோயிச மையமாக உள்ளது, அதில் லால்பாவ்தா என்கிற கம்யூனிஸ்ட் அமைப்பும்,
அதற்கு ஆதரவாக சர்ச்சின் செல்வாக்கும் இருக்கலாம், எனவே இந்த சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட்களின் பங்கு நிச்சயமாக அதிகமாக உள்ளது. முந்தைய மாநில அரசு கொண்டு வந்த புல்லட் ரயில் திட்டத்தை தடம் புரண்ட முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் பகுதியும் இதுதான். பால்கர் மாவட்டத்தில் சுவிசேஷ கிறிஸ்தவ மிஷனரி மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது, மேலும் பிராந்தியத்தின் பூர்வீகவாசிகள் ‘லால் பாவ்தா’ என்ற கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரவணைப்பில் உள்ளார்கள். சில பழங்குடியினரால் நடத்தப்படும் ஒரு மோசமான நில மாஃபியாவைப் அதாவது லால் பாவ்தா பற்றி அப்பகுதி மக்கள் பேசுகிறார்கள். உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்சஸ் பட்டதாரியுமான சுபேந்து ஆனந்த், மும்பைக்கு வடக்கே தஹானு-பால்கர் பழங்குடிப் பகுதியில் அதிக அளவில் தேவாலயங்களை அமைத்துள்ள கிறிஸ்துவ மிஷனரிகளுக்கும், இடதுசாரிகளின் தொண்டு அமைப்புகளுக்கும் சமமாக ஏராளமான நிதியுதவிகள் சர்ச்களிலிருந்து பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பழங்குடி ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் நிறைந்த மாநிலங்களான, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், இந்துக்கள் மற்றும் இந்து சாதுக்களை குறிவைத்து ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், கம்யூனிஸ்ட் மற்றும் கிறிஸ்தவ மிஷனரி தீவிரவாதிகளுக்கிடையேயான தொடர்பு இருப்பது உலகறிந்த உண்மையாகும்.
இந்த உறவின் காரணமாகவே, ஒடிசாவின் காந்தமாலில் 2008 ல் சுவாமி லட்சுமணந்தா சரஸ்வதி சுவாமியின் கொடூரமான கொலை, இதற்கு மிகச் சிறந்த மற்றும் சமீபத்திய உதாரணம். இதே போல் தான் தற்போது பால்கர் படுகொலையும் நடந்துள்ளது. விடுதலை இறையியலின் கிறிஸ்தவ சித்தாந்தத்தை (Christian ideology of Liberation Theology ) பிரதிநிதித்துவப்படுத்தும் மிஷனரி ஆர்வலர்கள், வழக்கமாக மார்க்சிய அமைப்புகளுக்கு மாறுகிறார்கள் – இந்த மாறுதல் 1978 ஆம் ஆண்டில் காஷ்டகரி சங்கதனா ( Kashtakari Sangathana )உருவானதிலிருந்து கிறிஸ்துவ பாதிரியார்கள் மார்க்சிய அமைப்புகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்கள். இரண்டு ஜேசுட் பாதிரியார்கள், பீட்டர் டி மெல்லோ மற்றும் நிகி கோர்டோசோ ஆகியோரால் இம் முடிவு எடுக்கப்பட்டது. இவர்கள் இருவரும் தஹானுவில் ஒரு கத்தோலிக்க மிஷனில் பணிபுரிந்தவர்கள். சில வருடங்களுக்கு முன் Veti Varoti கிராமத்தில் நடந்த கஷ்டகாரி சங்கதனா மாநாட்டில் வைக்கப்பட்ட கோஷம், ஆயுதங்களுக்கு பிச்சை எடுப்போம் என்பதாகும். பால்கர் பகுதி கிறிஸ்துவ மிஷனரிகளின் தீவிர ஆதரவுடன் , அரசியல் மற்றும் மத மேலாதிக்கத்திற்கான போர்க்களமாக மாறியுள்ளது. கிறிஸ்தவ மிஷனரிகள் இடதுசாரி குழுக்களிடமிருந்து நிரந்தரமான ஆதரவைப் பெறுகின்றனர், கிடைக்கின்ற ஆதரவை வைத்துக் கொண்டு, பழங்குடி மக்களை மதம் மாற்றுவதில் அதிக அளவில் கிறிஸ்துவ மிஷனரிகள் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்தவ மிஷனரிகளின் மத மாற்ற நடவடிக்கைகளை , இந்து மத அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை அவ்வப்போது காட்டுகிறார்கள். . கடந்த சில ஆண்டுகளாகவே பால்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கும், இந்து அமைப்புகளுக்கும் இடையில் ஒரு பெரிய பிரசனையாகவே மத மாற்றம் மாறிவிட்டன. தவிர, இந்த மிஷனரிகளுக்கு மகாராஷ்டிராவில் தற்போதுள்ள மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளில் ஒருவரான ஷரத் பவார் தலைமையிலான என்.சி.பி போன்ற அரசியல் கட்சிகளிடமிருந்து முழு ஆதரவும் உள்ளது. அதோடு, என்.சி.பியின் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான காஷிநாத் சவுத்ரியும் , சாதுக்களை கொன்ற கும்பலில் ஒருவர். அவர் மீதும் கும்பலைத் தாக்குதலுக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், மூன்று உள்ளூர் கும்பல் கொலையில் ஈடுபட்டதாக கூறப்படும் போது பல உள்ளூர் தலைவர்கள், என்சிபி.யின் பொறுப்பாளர்கள், சிபிஎம்.கட்சியின் உள்ளூர் பிரமுகர்களும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. என்.சி.பி தலைவர் காஷினாத் சவுத்ரியை அந்த இடத்திலேயே பார்த்ததும், கொலைகார கும்பல் உற்சாகமடைந்தது என்றும் சித்ரா சவுத்ரி தெரிவித்திருந்தார். இவர் கர்சின்சில் பஞ்சாயத்து சர்பஞ்ச். பால்கர் ஜில்லா பரிஷத் உறுப்பினரையும் என்சிபி தலைவரையும் பார்த்த கும்பல் ‘தாதா ஆலா, தாதா ஆலா’ (பெரிய அண்ணன் இங்கே) என்று கோஷமிடத் தொடங்கினார்கள். இதை இந்த சம்பவத்தின் வீடியோக்களிலும் காணலாம்.
இந்த சம்பவத்தின் காரணமாக மகாராஷ்ட்ர மாநில அரசு 110 பேர்களை கைத செய்துள்ளது. கைது செய்யப் பட்டவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்தவரகள். இவர்களை ஜாமினில் எடுக்க, கிறிஸ்துவ மிஷனரியுடன் தொடர்பில் உள்ள தொண்டு நிறுவனமான கஷ்டகாரி சங்கதனாவின் தலைவர் ஷிராஷ் பல்சாரா என்பவர் முன் வந்துள்ளார். கொலை சம்பவத்திற்கு சதி செய்தவர்கள் , ஜெய்ராம், மகேஷ் சீதாராம், கணேஷ் தேவாஜி ராவ், ராம்தாஸ் ரூப்ஜி, சுனில் சோமாஜி ராவத்தே ஆகிய ஐவரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளார்கள். இவர்கள் ஐவரும் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவர்கள். சாதுக்கள் தாக்கப்பட்ட சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த காசிநாத் சௌத்திரி என்பவரும், இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் காசா பஞ்சயாத்துச் சார்ந்த விஷ்வ பத்ரா, சுபாஷ் பாரார், தர்மா பாரார் இருக்கிறார்கள். பரவலாக மத மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பால்கர் பகுதியும் ஒன்றாகும். இடதுசாரிகளும், கிறிஸ்துவ மிஷனரிகளும் திட்டமிட்ட ரீதியில் நடத்திய படுகொலை என்பதை மூடி மறைக்கும் செயலில் மகாராஷ்ட்ரா மாநில அரசு முயல்கிறது.
ஈரோடு சரவணன்