பாரத் கீ லட்சுமி

நாட்டு மக்களின் நலம் மீது அக்கறை காட்டுவதில் தொடர்ந்து பாடுபட்டு வரும் பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்கள் மன் கீ பாத் நிகழ்ச்சிகளின் மூலம்மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். நாடுமுழுவதும்தசரா விழாக்கோலம் கண்ட பாரதமக்களுடன் வாழ்த்துக்கள் கூறி விழாக்கால சந்தோஷப
பகிர்வுகளை மேற்கொண்டு மக்களின் குதூகலத்தைஇரட்டிப்பாக்கினார்.

இந்த சந்தோஷக் கடலில் திக்குமுக்காடித் திளைத்திருக்கும்போதே தொடர்ந்த நட்சத்திர விழாவானதீபாவளியை வித்தியாசமாக அதே நேரம் உழைத்து சாதனை படைத்து விளம்பர ஜன்னல்கள் வழியே வெளிச்சத்துக்கு
வராத பேர்களும் கவரவிக்கப்பட வேண்டும் என்கின்ற உயர்ந்த நல்லெண்ணத்தில் தீபாவளியைக் , சிறப்பாகக்கொண்டாடுவோம், பல துறைகளில் சாதனைகள் படைத்தபெண்களைக் கௌரவிப்போம், அவர்களின் திறமை மற்றும் வலிமையை 'நாரிசக்தி' என்ற பெயரில் கொண்டாடுவோம். சமூக வலைதளங்களில் பாரத் கீ லட்சுமி  (இந்தியாவின் லட்சுமிகள்), பெண்களின் சாதனைகளை பதிவிடுவோம் என்று மன் கி பாத்  மூலம் ,
கேட்டுக்கொண்டார்.

பிரதமரின் இந்த அழைப்பு பெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று வருகிறது. பெண் குழந்தைகளை
லட்சுமியாக பாவிப்பது நமது பாரதக் கலாசாரம். தீபாவளிப் பண்டிகை நம் அனைவரின் இல்லத்துக்கும்
ஸ்ரீலட்சுமிதேவியை வரவழைப்பதைக் குறிக்கும். லட்சுமி நம் இல்லங்களுக்கு வருவதன் மூலம், செழிப்பும்,
மகிழ்ச்சியும் உண்டாகும்

நாட்டில் சாதனைப்பெண்மணிகள் ஏராளம், ஏராளம்..சோசியல் மீடியா என்று நம்மைச் சுற்றி பல பொதுத்

தொடர்பு சாதனங்கள் இருந்தபோதும், சாதனை பெண்மணிகளில் பெரும்பாலானோர் முகவரி
அறியப்படாதவர்களாகத் தான் இன்றளவும் இருந்துவருகின்றனர். சொல்லப் போனால் பலரது உழைப்பு
எதிர்கால சந்ததிகள் அனைவரும் தெரிந்துகொள்ளும் வண்ணம் பதிவுகள் மேற் கொள்ளப்படாமல் நான்கு
சுவர்களுக்குள்ளேயே முடக்கப்பட்டு விடும் நிலையையும் கண்டு வருகிறோம்.

பாரத் கீ லட்சுமி என்கின்ற அறைகூவல், பெண்களின் சாதனைகளை அனைத்துலகும் அறியும் வண்ணம் திறந்த
வெளி அணுகுமுறை கொண்டு கெளரவம் கொடுக்கும் காட்டலிஸ்ட்டாக அமையத்தொடங்கிவிட்டது.
மகளிர் மேற்கொண்ட சாதனைகள் பலவற்றில் சிலவற்றை மேற்கோள் காட்டவும் தவறவில்லை. அவர் குறிப்பிட்ட சில தன்னூக்க நடப்பு நிகழ்வுகள் : கே ரமேஷ் என்பவர் எழுதியது: " எங்கள் இல்லத்தில் ஐந்து பிள்ளைகள். 1990இல் எனது தந்தை அகால மரணம் அடைந்தார். அதன் பின்னர்

எனது தாய்தான் அனைத்து குடும்ப பாரத்தையும் தமது தோளிலே சுமந்து எ ங்களைக் காத்து வந்தார். இன்று
நாங்கள் அனைவரும் சுபிக்ஷமாக உள்ளோம் அஸ்ஸாம் ரைபிள் கன்டிஞெண்டின் தலைவியான குஷ்பு கன்வெர்தான் எனது பாரத் கீ லட்சுமி " என்கின்றார்.குஷ்பு கன்வெர் ஒரு பஸ் கண்டக்டரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. (3) தாய் கவிதா திவாரிக்கோ தனது மகள்தான் பாரத் கீ லட்சுமி என்கின்றார். தனது கைத்திறனால் நிறைய நிறைய
PAINTங்குகள் வரைவது மட்டுமின்றி, க்ளாட் (CLAT) பரீட்சையில் உயர்ந்த ராங்k வாங்கியுள்ளாள்" என்று
பெருமைப்படுகிறார்.(4) குவாலியர் ரயில் வண்டி நிலையத்தில் இலவசமாக குடிநீர் வழங்கி வரும் மேகா
என்பவர் மற்றோரு பாரத் கீ லட்சுமி. ஏன் எனில் இவர் 92 வயது பெண்களில் பலர் இன்று மிகப் பொறுப்பான பணிகளை ஆரவாரம் எதுவும் இன்றி அமைதியாகச் செய்து வருகின்றனர். ஆண்களுக்கு பெண்கள் வலிமை குறைந்தவர்கள் இல்லை காண் என்று கூறும் அளவுக்கு எடுத்துக்கொண்ட பணிகளிலும், கல்விகேள்விகளிலும்
வல்லவர்களாக திகழ்ந்து வருகின்றனர். “ஜஸ்டிஸ் டெலிவரி” போன்றவற்றை மக்கள் பெறுவதில் அக்கறை காட்டும் வழக்கறிஞர்கள், போக்குவரத்து வசதிகள் குறைவாக உள்ள இடங்களிலும் மருத்துவம் பார்க்கும்
டாக்டர்கள்,. ஏழைக் குழந்தைகளுக்கு TUITION சொல்லிக்கொடுத்தல், என்ற பல பணிகளை பெண்டிர்
செய்து வருகின்றனர். இவர்களை பெருமைப்படுத்தும் விதத்தில் பொதுக்கூட்டங்கள் போன்றவைகளை
கிராமங்களிலும், நகரங்களிலும் நடத்தி அவர்களின் வல்லமைக்கு, வெற்றிக்கும் உறுதுணையாக இருப்போம்.,”