ஆங்கிலேயர்கள் ஆண்ட 1944 காலம் முதல் கத்தோலிக்க பாதிரி, கன்னியாஸ்திரிகளான எங்களுக்கு வருமான வரி கிடையாது. அதை 2014ல் அரசு மாற்றி எங்களையும் வரி கட்ட சொன்னது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கேரள உயர் நீதிமன்றமும் ‘அரசின் அந்த அறிக்கை சரியே, உங்களின் புனிதநூல் சட்டம் நாட்டின் சட்டத்துக்கு மேம்பட்டதில்லை, அதற்கு உட்பட்டதே. எனவே, நீங்கள் வரி கட்ட வேண்டும்’ என இரு தினங்களுக்கு முன், கூறிவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப் போகிறோம் என கூறியுள்ளனர் பாதிரிகளும் கன்னியாஸ்திரிகளும். தாங்கள் வரி கட்ட வேண்டாம் என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “எங்கள் புனித நூல் சட்டப்படி (Canon Law), நாங்கள் ‘நிரந்தர ஏழ்மையை ஏற்றுக் கொள்ள’ சபதம் எடுத்திருக்கிறோம். பைபிள் சட்டமும் எங்களை ‘இறந்தவர்களாக’ (civil death / Obsolete) கருதுகிறது’ என்பது. அதனால் எங்களிடம் அரசு வரி வசூலிக்க கூடாது என்பது!!!. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இணையதளவாசிகள், உங்கள் கூற்று உண்மை எனில், இறந்தவருக்கு எதற்கு சம்பளம், புனிதநூலில் உலகம் ‘தட்டை’ என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக அது உண்மையாகிவிடுமா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.