சும்பொன் முத்துராமலிங்க தேவர் மாணவராக இருந்தபோது வாரந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனைத் தரிசித்து வருவார். ஒருமுறை அவர் திருப்பரங்குன்றம் செல்லும்போது கோயிலுக்குச் செல்லும் பாதையில் ஒரு கல்லின் மீது நின்றுகொண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரி பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
ஏ பாவிகளே! இதோ நான் மிதித்துக் கொண்டிருக்கும் இந்தக் கல்லுக்கும் அதோ வீதியில் குவிந்து கிடக்கிறதே அந்த கற்குவியலுக்கும் நீங்கள் கோயில் உள்ளே வணங்கும் கல்லுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? ஏன் கல்லைத் தெய்வமென்று கும்பிடுகிறீர்கள்?” என்று ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டு கோபம் அடைந்த தேவர், பாதிரியிடம், உங்களுக்கு அம்மா இருக்கிறார்களா?” என்றார்.
இருக்கிறார்” என்றார் பாதிரியார்.
உங்களுக்கு திருமணம் ஆச்சா?”
ஆகிவிட்டது”.
உங்களுக்கு உடன்பிறந்த சகோதரிகள் உண்டா?”
ஒரே தங்கை உண்டு”
இதைக்கேட்ட தேவர், உங்கள் தாயும் பெண் தான். உங்கள் தங்கையும் பெண் தான். உங்கள் மனைவியும் பெண் தான். மூவரும் பெண்கள் தான் என்பதற்காக, அவர்களிடம் ஒரேவிதமாக உங்களால் பழக முடியுமா?” என்றார்.
– பாதிரி தடுமாறினார்.
நீங்கள் நின்றுகொண்டிருக்கும் கல், வீதியில் குவிந்து கிடக்கும் கற்கள், ஆலயத்தில் இருக்கும் விக்கிரஹம் மூன்றும் கற்களாக இருப்பினும் அவைகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அர்த்தங்களும் அனுஷ்டிக்கும் முறைகளும் மாறும்” என்றார் தேவர்.
கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தபோது பாதிரி அவமானத்தால் நடையைக் கட்டினார்.எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்