பாகிஸ்தானிய சிந்தனையாளர் அடித்துக் கூறுகிறார்
பாகிஸ்தானியர்கள் ஹிந்துக்களே
பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களில் 99.99 சதவீதத்தினர் ஹிந்துக்களே என்று பாகிஸ்தானைச் சேர்ந்த சிந்தனையாளர் பௌசியா சையத் கூறியுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனல் ஒன்றில், முஸ்லிம் போதகர் சையத் அமீதின் கருத்தை எதிர்த்து வாதாடியபோது பௌசியா சையத் இதைத் தெளிவுபட சுட்டிக்காட்டியதுடன் இதற்கான ஆதாரங்களையும் முன் வைத்தார்.
அகண்டபாரதம் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் வாதாடி வருபவர், பௌசியா சையத். அவர் ஒன்றும் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர் கிடையாது. ஆனால், அகண்ட பாரதம்தான் நமது பூர்வீகம் என்பதை பௌசியா சையத் வலுவாக எடுத்துரைத்து வருகிறார். பாகிஸ்தானில் கருத்துச் சுதந்திரம் மேலோங்கியுள்ளது என்பதை ஏற்க முடியாது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எதற்கும் அஞ்சாமல் பௌசியா சையத், கருத்து ரீதியாக வாதிட்டு வருவது வரவேற்கத்தக்கது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, வங்காள தேசம், உள்ளிட்டவை அடங்கிய அகண்ட பாரதத்தில் வாழ்ந்து வருவோரில் 99.99 சதவீதத்தினர், பூர்வீக குடிமக்கள். இவர்கள் அனைவரும் ஹிந்துக்களே என்பதில் துளியும் சந்தேகத்திற்கு இடமில்லை. இவர்களின் மூதாதையர்கள் ஒரே ஆணிவேரிலிருந்து கிளைத்தவர்கள்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்த உண்மையை உணர்ந்துகொள்ளாதவர்கள் பாகிஸ்தானில் பெருமளவு உள்ளனர். இதனால்தான் ஹிந்து கலாச்சாரத்தை அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை பௌசியா சையத் பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் கூட, ஹிந்து கலாசாரத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என பெரும்பாலான முஸ்லிம்கள் கருதி வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தால், வந்தேறிகளான துருக்கியர்கள் உள்ளிட்ட விதேசி முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். மற்றபடி ஹிந்துக்கள், முஸ்லிம்களின் முன்னோர் அனைவரும் ஒரே வித்திலிருந்து வந்தவர்களே. சில பெயர்களை கவனித்து பார்த்தால், இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். சீமா, பாஜ்வா, ஹக்கர், சேத்தி, சேஹல் உள்ளிட்ட பெயர்கள் ஹிந்துக்களிடமும் உள்ளன, முஸ்லிம்களிடமும் உள்ளன.
பௌசியா சையத் மற்றொரு கருத்தையும் துணிச்சலாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகளின் கூடாரமாக பாகிஸ்தான் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ளத் தயங்கக் கூடாது என்பது அவரது நிலைப்பாடு. பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடன் ஒளிந்திருந்தார். அவரை அமெரிக்க கமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து தீர்த்துக் கட்டினர். இதன் பிறகே, பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன், பதுங்கியிருந்தது உலகம் முழுவதும் தெரிய வந்தது என்பதை பௌசியா சையத் சுட்டிக்காட்டியுள்ளார்.
பௌசியா சையத் தன் மனம் போன போக்கில் எதையெதையோ கூறிவருகிறார் என்று சிலர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் பௌசியா சையத் கூறியதையே தலைசிறந்த வரலாற்று ஆசிரியர், வில் டூரண்ட், ‘த ஸ்டோரி ஆஃப் சிவிலிசேஷன்’ என்ற ஆய்வு நூலில் அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். ஹிந்துஸ்தானில் வாள் முனையில் வன்முறைச் சூழலில் தான், ரத்தக்களரிக்குப் பிறகு ஹிந்துக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டார்கள். இதில் லட்சக்கணக்கானோர் உயிர் இழந்துள்ளனர் என்பதை வில் டூரண்ட் தெரிவித்துள்ளார். கசப்பானவைகளாக, இருந்தாலும் உண்மைகளை யாரும் மூடிமறைத்து விட முடியாது.
பாகிஸ்தானிலிருந்து சில கலைஞர்களை நம் நாட்டுக்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துவதில் சில அமைப்புகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இவர்களில் சிலர், நம் நாட்டின் நலனுக்கு உகந்த வகையில் செயல்படக் கூடியவர்கள் கிடையாது. ஆனால் அகண்ட பாரதத்தை வலியுறுத்தியும் பாகிஸ்தான் முஸ்லிம்களின் முன்னோர் ஹிந்துக்களே என்பதை எடுத்துரைத்தும் தொடர்ந்து உரையாற்றி வரும் பௌசியா சையத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை உள்ளிட்ட நகரங்களில் உரையாற்ற வைக்க தேச நலனில் நாட்டம் கொண்ட அமைப்புகள் முன்வரவேண்டும்.
முஸ்லிம் முன்னோர்கள் ஹிந்துக்களே என்றும், அகண்ட பாரதத்தை வலியுறுத்தியும் வரும் பௌசியா சையத்தை இந்தியாவுக்கு அழைத்து வந்து உரையாற்றவைக்க வேண்டும்.