தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை மாவட்டம் தோறும் சென்று மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் கருத்து கேட்கும் நிகழ்ச்சி பற்றி தேசபக்தியூட்டும் கல்விக்கான அகில பாரத அமைப்பான வித்யா பாரதியின் மாநில தலைவர் உ.சுந்தரிடம் கேட்டபொழுது அவர் தெரிவித்த தகவல்கள்:
- தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப கல்வி தாய்மொழி தமிழில் இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா இசை, நீதிக் கல்வி, ஆன்மிக கல்வி இவைகளும் கற்பிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் தமிழை பிரதிபலிக்கும் வகையில் ஔவையார், ஆண்டாள், வள்ளுவர் இவர்கள் கூறிய கருத்துகளை கடலூரில் சேர்க்க வேண்டும். நமது தமிழகத்தின் கிராமிய நிகழ்கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் போன்றவற்றை கற்பிக்க வேண்டும்.
- பழமையான கோயில்கள், வரலாறு, கட்டிடக் கலை, சிற்பக் கலை போன்றவற்றை இணைக்க வேண்டும். நமது பழமையான விளையாட்டுகளான கோக்கோ, கபடி, சிலம்பாட்டம் ஆகியவற்றை கற்றுதரவேண்டும். தேசிய தெய்விக எண்ணங்களை வளர்க்கும் கம்பராமாயணம், திருக்குறள், தொல்காப்பியம் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை கற்பிக்க வேண்டும்.
தேவாரம், திருவாசகம் இவற்றை கற்க இலங்கை மக்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல நாமும் நம்முடைய மதம் சார்ந்த பாடல்களை தேர்ந்தெடுத்து கற்க வேண்டும். சமுதாய சீர்திருத்தம் செய்த திரு.வி.க, பாரதியார், ராமானுஜர் இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை கற்பிக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, தமிழ் தலைவர்கள் ஒண்டிவீரன், மருது சகோதரர்கள், குயிலி போன்றவற்களுடைய வாழ்க்கை சம்பவங்களை கற்பிக்க வேண்டும். பாரம்பரிய நெல்வகைகள், உணவு பழக்கங்கள் ஆகியவற்றை கற்பிக்க வேண்டும்.
NCC, NSS, போன்றவற்றை மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்கவேண்டும். இதை கற்ற மாணவர்களை கிராமங்களுக்கு அழைத்து சென்று தொண்டு செய்ய கற்று தரவேண்டும்.
இவற்றை எல்லாம் பள்ளிக் கல்வித் துறைக் குழுவிடம் வலியுறுத்த வேண்டும்.