பட்டதாரியே, வேலை இருக்கு வா!

நிஜமாகதான் சொல்கிறேன், அவ்வளவு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன நமது நாட்டில்.  அப்படியென்றால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றனவே, அது என்ன என்றால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பது எனது பதில். சரி, வேலை வாய்ப்புக்கள் அவ்வளவு உள்ளதென்றால் ஏன் பலருக்கு வேலை இல்லை? இதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதல் காரணம், வேலைக்கு ஏற்ற திறமை பல இளைஞர்களிடம் இல்லை. இதை நான் சொல்லவில்லை, பல லட்சக்கணக்கான மாணவர்களின் திறனை சோதித்து பல நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் சொல்கிறது.

இரண்டாவது காரணம் இளைஞர்களின் மனோபாவம். நான் இந்த வேலைக்குத்தான் செல்வேன், இவ்வளவு சம்பளம் இருந்தால்தான் போவேன் என்று கூறுவது. இந்த பிடிவாதத்தில் ஓரளவு நியாயம் இருந்தாலும், நமக்கு விருப்பப்பட்ட வேலை கிடைக்கும் வரை, எந்த வேலை கிடைக்கிறதோ அதில் சேர்ந்து, சிறப்பாக செய்தால், அதிலும் முன்னேறலாம்.

மூன்றாவது காரணம் ஒரே வேலைக்கு தகுதியான நபர்கள் ஏராளமானோர் இருக்கும் பொழுது, ஈஞுட்ச்ணஞீ  குதணீணீடூதூ பிரச்சனை காரணமாக சரியான வேலை கிடைப்பது சவாலாக உள்ளது

தொழில்நுட்ப வளர்ச்சி , தொழில் மந்த நிலை, போன்ற சில காரணங்களால் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளது. தொழில் மந்த நிலை என்றால் தொழில்துறையே சிக்கலில் இல்லை, ஒரு தொழில் மேம்படும் போது அதன் காரணாமாக வேறு தொழில் பாதிக்கப்படுவது இயற்கை விதி.

இவைகளை சரியாக கையாள தெரிந்துக்கொண்டால் வேலை கிடைப்பது எளிதாகும்.

திறமைகளை  வளர்த்து கொள்ளுங்கள்

நாம் என்ன படிப்பு படிக்கிறோமோ அது சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாம் மெருகேற்றி கொள்வது அவசியம். பாட புத்தகங்கள் மட்டுமல்லாது துறை சார்ந்த புத்தகங்களை படிப்பது, இணையத்தில் செய்திகளை சேகரித்து படிப்பது, தொழில் வல்லுனர்களுடன் உரையாடி தகவல்களை பெறுவது, போன்றவைகளை செய்ய வேண்டும். அதே போல மென்திறன்கள், அதாவது குணிஞூணா குடுடிடூடூண் எனப்படும் திறமைகளை மேம்படுத்துவது அவசியம்.  தகவல் பரிமாற்றம் (ஞிணிட்ட்தணடிஞிச்ணாடிணிண ண்டுடிடூடூண்), குழு திறன்கள் (ணாஞுச்ட் ண்டுடிடூடூண்), டூணிஞ்டிஞிச்டூ ண்டுடிடூடூண், டிணணாஞுணூணீஞுணூண்ணிணச்டூ ண்டுடிடூடூண், போன்றவைகளை மெருகேற்றிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் பயிற்சி கட்டாயம் எடுக்கவும், இன்றைக்கு இந்த திறன்களில் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதற்கு பணம் செலவழிக்க யோசிக்க வேண்டாம், இது நமக்கு ஒரு முதலீடே.

மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்

அனைவருக்கும் மிகவும் பிடித்த வேலை என்று ஒன்று இருக்கும், அது கிடைத்தால் சந்தோஷமே, ஆனால் யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும்.  ஆசை இருந்தாலும் எல்லாருமே ஐ.ஏ.எஸ் ஆகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ முடியாது. எனவே இரண்டு அல்லது மூன்று துறைகளில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள். எதில் உங்களுக்கு வேலை அமைகிறதோ அதில் சென்று அமருங்கள். அதற்காக படித்து முடித்த அடுத்த நாளே, எந்த வேலை கிடைக்கிறதோ அதில் போய் சேருங்கள் என்று சொல்லவில்லை.  படித்து முடித்து 3 மாதங்கள் கடக்கும் நிலையில் உங்களுக்கே தெரியவரும்,  எந்த துறையில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்று, அது உங்களது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்பமாக இருந்தாலும் அவ்வேலையில் சேருங்கள். அதில் உழைத்து  திறமைகளை வளர்த்துக்கொண்டு உயரலாம்.

சிலருக்கு தாங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். ஆனால் நிறுவனம் சிறிய நிறுவனமாகவோ அல்லது எதிர்பார்ப்பதை விட இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் கம்மியாக இருக்கும். இதை காரணம் காட்டி கிடைத்த வேலையில் சேர மறுப்போர் ஏராளம். எனக்கு தெரிந்த ஒருவர், நல்ல வேலை தேடிக்கொண்டிருந்தார். ஆறு மாதங்கள் கழித்து  அவர் எதிர்பார்த்த துறையில் வேலை கிடைத்தது, சம்பளம் 12,000 தருவதாக சொன்னார்கள். இவரோ 15,000 சம்பளம் வேண்டும் என்றார், 6 மாதம் கழித்து உங்கள் வேலையை பார்த்த பின்னர் சம்பள உயர்வு அளிக்கிறோம்” என்றார்கள் நிறுவனத்தினர். இவரோ அந்த வேலை வேண்டாம் என்று பணியில் சேர மறுத்துவிட்டார்.  இன்னொரு ஆறு  மாதங்கள் 15000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை தேடினார், பின்னர் வேறொரு சிறிய நிறுவனத்தில் அதே 12000 சம்பளத்திற்கு சேர்ந்தார். யோசித்து பாருங்கள், அவர் பிடிவாதத்தால் இழந்தது ஆறு  மாத வருவாய், ஆறு மாத அனுபவம். அவர் மட்டும் அன்றே சேர்ந்திருந்தால் இந்த ஆறு மாதத்தில் சம்பள உயர்வும் பெற்றிருப்பார்.

நான் கல்லூரி முடித்து வெளியே வரும் மாணவர்களுக்கு சொல்வது இதுதான், முதல் 3 வருடங்களுக்கு சம்பளத்தை பற்றி அதிகம் யோசிக்காதீர்கள். இந்த வேலையில் சேர்ந்தால் என்னுடைய முப்பதாவது வயதில் நல்ல நிலையில் இருக்க முடியுமா” என்று யோசியுங்கள், இருக்க முடியும் என்று நம்பிக்கை இருந்தால் பணியில் சேருங்கள்.

சுகவாசியாக இருக்க விரும்பாதீர்கள் 

50 கி.மீ. தினமும் ரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணித்து வேலைக்கு செல்வோர் பலர் இருக்கையில், 10 கிமீ தொலைவில் அலுவலகம் இருக்க வேண்டும், அலுவலக கார் அல்லது பேருந்து இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். வேலை பளு அதிகம், அதிக நேர வேலை என்றெல்லாம் காரணம் காட்டி வேலைக்கு சேர யோசிப்பார்கள் சிலர். ‘வீட்டிலிருந்து அலுவலகம் ரொம்ப தூரம், இரண்டு பேருந்துகள் பிடித்துப்போக. 1 மணி நேரத்திற்கு மேல் ஆகும்’,  அல்லது ’என் நண்பன் இவ்வளவு சம்பளம் வாங்குகிறான், 8 மணிநேரம் தான் வேலை. ஆனால், எனக்கு சம்பளம் கம்மி, 10 மணி நேரம் வேலை” என்றெல்லாம் காரணங்கள் சொல்லி வேலைக்கு சேர யோசிப்போரும் உண்டு.   மேலே சொன்னது தான், சுகங்கள் வேண்டும் என்று யோசிப்பதை முதல் ஐந்து வருடங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

குறைவான தேவை – அதிக ஆட்கள்

இது அனைத்து துறையிலும் இருப்பதுதான். அடுத்த ஐந்து ஆண்டுகளின் 5 லட்சம் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் வேண்டும் என்றால், 30 லட்சம் பேர் அந்த படிப்பை படித்து முடித்து வெளியே வரும்பொழுது, 25 லட்சம் பேருக்கு வேலை அமைவதில் சிக்கல் ஏற்படுகிறது. 5 லட்சம் பேருக்குத்தான் கிடைக்கப்போகிறது என்பதற்காக நாம் படிக்காமல் இருக்கவும் முடியாது. நாம் 5 லட்சம் பேரில் ஒருவரா அல்லது 25 லட்சம் பேரில் ஒருவரா என்பதை முன்கூட்டியே கணிப்பது கடினம்.  நாம் 5 லட்சத்தில் ஒருவராக வேண்டுமென்றால், முன்பு சொன்னது போல திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  எல்லோராலும் அனைத்து திறமைகளையும் பெற முடியாது. அதனால் 25 லட்சத்தில் ஒருவராகி விட்டால் வாழ்க்கையே வீணா? நிச்சயம் இல்லை.

இந்த துறையில் வேண்டுமானால் வாய்ப்புக்கள் குறைந்திருக்கலாம் ஆனால் இதைத் தவிர்த்து மேலும் பல துறைகள் உள்ளன, அதில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் 2 அல்லது 3 துறைகளில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள், நிச்சயம் கிடைக்கும். எனது நண்பர் சாப்ட்வேர் என்ஜினியரிங் படித்தார். ஓராண்டு முயற்சி செய்தும் மென்பொருள் பொறியாளர் வேலை கிடைக்கவில்லை.  பிறகு, பொறியாளர் வேலை என்பதை சற்று மாற்றி, மென்பொருள் நிறுவனத்தில் ஏதோ ஒரு வேலை என்று தேட, 10,000 ரூபாய் சம்பளத்தில், ஒரு  மென்பொருள் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் வேலை கிடைத்தது, உற்சாகமாக செய்தார். பத்து ஆண்டுகளில் மேலாளராகிவிட்டார்.  தற்பொழுது சம்பளம் ஒரு லட்சத்தை நெருங்கிவிட்டது.

தொழில்நுட்ப வளர்ச்சி

இதைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். கம்ப்யூட்டர் வந்த பின்னர் டைப்ரைடர்கள் மறைந்துபோனது, சி.டி வந்த பின்னர் பழைய காஸெட்கள் போயே போச்சு. இது போல நூறு உதாரணங்கள் சொல்லலாம். வேலைவாய்ப்பிலும் பார்த்தோம் என்றால், சில துறைகளில் மென்பொருள்கள் மற்றும் தானியங்கிகள் வந்துவிட்டன. அது வேலைவாய்ப்புக்களை சுருக்கி விட்டது. இதிலிருந்து நாம் வெற்றி பெற, நமது அறிவை அதிகரித்துக்கொண்டே இருக்க வேண்டும். புதிது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலை நிறுத்தக்கூடாது.

ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.  வாய்ப்புக்கள் நம்மை சுற்றி நிறைய இருக்கின்றன. நமக்கு சரியான வேலை கிடைக்கவில்லையென்றால் நமது தேடல் சரி இல்லை என்று அர்த்தம். நம்மை சுற்றி நலன் விரும்பிகள் பலர் இருக்கிறார்கள். தயக்கப்படாமல் அவர்களிடம் ஆலோசனையோ, உதவியோ கேளுங்கள், நிச்சயம் சிலர் உதவி செய்வார்கள். தொடர்ந்து முயன்றால், வெற்றி நிச்சயம்.

கட்டுரையாளர் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர்

hr4nation@gmail.com

 

விலக்க வேண்டியவை

திரைப்படங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகம் இருப்பது போல வரும் காட்சிகளை தவிர்த்தல் நலம். ஏனெனில் அது போன்ற காட்சிகள் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தி விடும், தன்னம்பிக்கையை குறைக்கும். அதே போல சமூக ஊடகங்களில் சில சமுக விரோதிகள், எவ்வித  அடிப்படையுமின்றி அவர்களாகவே, படித்த இளைஞனுக்கு வேலை இல்லை, புரட்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் எழுதி, மூளை சலவை செய்ய முயற்சிக்கிறார்கள். இதிலிருந்து நாம் விலகி இருக்க வேண்டும்.

 

 

வேண்டாம் புறவாசல் வழி வேலை

வேலை கிடைத்தே ஆகவேண்டும் என்கிற உங்களின் தீவிர வேட்கையைப் பயன்படுத்தி பணம் பறிக்க சிலர் காத்திருக்கிறார்கள். ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் தந்தால் 20000 ரூபாய் சம்பளத்தில் வேலை என்று ஆசை காட்டுவார்கள். அதில் மயங்கிவிடாதீர்கள். ஆச்ஞிடு ஞீணிணிணூ மூலமாக வேலை உங்களுக்கு ஆபத்தில் முடியலாம், எனவே தவிர்த்துவிடுங்கள்.

 

 

நேர்முக தேர்வு – செய்ய வேண்டியவை / செய்யக்கூடாதவை

  • நாம் எந்த நிறுவனத்திற்கு நேர்முக தேர்விற்கு செல்கிறோமோ, அந்த நிறுவனம் பற்றி அறிந்திருத்தல் அவசியம். அதே போல நாம் விண்ணப்பிக்கும் வேலை என்ன மாதிரியான வேலை என்பதையும் அறிந்துவைத்து கொள்வது நலம்.
  • நமது ரெஸ்யூமை (கீஞுண்தட்ஞு) ஒரு முறைக்கு பலமுறை சரிப்பார்க்கவும். தேவையான விஷயங்களை கண்டிப்பாக சேர்க்கவும், பக்கங்களை நிரப்பவேண்டும் என்பதற்காக  தேவையில்லாத விஷயங்களை சேர்க்க வேண்டாம். “8ம் வகுப்பில் பேச்சு போட்டியில் பரிசு வென்றேன்” என்று எழுதுவோர் உண்டு, கல்லூரியில் ஏதேனும் போட்டியில் வென்றிருந்தால் சேர்க்கலாம், அது உங்கள் திறனை நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டும், 8ம் வகுப்பில் பரிசு பெற்றதை சேர்ப்பது தேவை இல்லாதது.
  • அதே போல என்ன பணிக்கு விண்ணப்பிக்கிறோம் என்று தெளிவாக குறிப்பிடல் வேண்டும். பொத்தாம் பொதுவாக அனுப்பினால், அவற்றை பெரும்பாலும் நிறுவனங்கள் கண்டுகொள்வதில்லை.
  • எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை சரிப்பார்த்தல் மிக முக்கியம்.
  • என்ன வகையான தேர்வு முறைகள் என்று அறிந்துகொள்ளுங்கள். எழுத்து தேர்வு என்றால் என்ன மாதிரியான தேர்வு, நேர்முக தேர்வு என்றால் அது எவ்வகை என்பதையும் முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளளவும்
  • நேர்முக தேர்விற்கு குறித்த நேரத்தில் செல்லவும். 50% இளைஞர்கள் நேர்முக தேர்வுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில்லை. அதே போல சிலர் நேர்முக தேர்விற்கு வந்தால், ஒரு அரை மணிநேரம் காத்திருக்கக்கூட  யோசிக்கிறார்கள். இதையும் தவிர்க்க வேண்டும். காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் நாளிதழோ அல்லது புத்தகமோ படிக்கலாம் (செல்போனை தவிர்த்தல் நலம்)
  • தவிர்க்க முடியாத காரணங்களால் தாமதமானால், நிறுவனத்திற்கு போன் மூலம் தெரியப்படுத்தவும். அதே போல கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுத்தி அதனால், தேர்வுக்கு போக முடியாத சூழல் ஏற்பட்டாலும், உடனே தெரியப்படுத்தவும்
  • உங்கள் நடை, உடை, பாவனை மிக முக்கியம், தேவைப்பட்டால் பயிற்சி பெறவும்.  என்ன வகையான கேள்விகள் கேட்பார்கள் , அதற்கு எவ்வாறு பதில் தர வேண்டும் என்று தேர்வுக்கு முதல் நாளே தயார் செய்துக் கொள்ளுங்கள்.
  • எக்காரணம் கொண்டும் பொய் சொல்வது கூடாது. 10 முதல் 20 சதவீதம் விண்ணப்பதாரர்கள் தங்கள் முன் அனுபவம் பற்றி பொய் சொல்வதாக நிறுவனங்கள் சொல்கின்றன.  பொய் கண்டுபிடிக்க பட்டால் அது பிரச்சனையில் போய் முடியும்.
  • ஒரு வேலை கிடைக்கிறது, சேர்வதற்கு 15 நாட்கள் உள்ளது.  இதற்கு முன்பு நீங்கள் நேர்முக தேர்வில் கலந்துகொண்ட வேறொரு நிறுவனம்  இந்த இடைப்பட்ட நேரத்தில் உங்களை தேர்வு செய்கிறது என்றால், ஏதோ ஒன்றில் தான் நீங்கள் சேர முடியும். மற்ற நிறுவனத்திற்கு நீங்கள் சேரப்போவதில்லை என்பதை தெரியப்படுத்தவும். நீங்கள் வேண்டாம் என்றுகூறினால்  காத்திருப்பு பட்டியலில் உள்ள வேறு யாரையேனும் தேர்வு செய்வர்.

 

 

இது பெற்றோர்களுக்கு

பிள்ளைகள் நேர்முக தேர்விற்கு செல்லும்பொழுது உடன் செல்லாதீர்கள். சில வீடுகளில் இது நடக்கிறது. 20 வயதுள்ள ஆணோ அல்லது பெண்ணோ நேர்முக தேர்விற்கு தனியாக வரும் அளவிற்கு தைரியம் இல்லையென்றால், நிறுவனங்கள் அவர்களை தேர்வு செய்ய யோசிக்கின்றன.

ஆபீஸ் ரொம்ப தூரம், நீ போக வேண்டாம், பக்கத்தில ஏதாவது வருதா பாரு” என்று  ஆண் பிள்ளைகளிடம் சொல்லும் பெற்றோர்களும் உண்டு. இதையும் தவிர்த்து விடுங்கள்.

 

 

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

  1. உங்களை பற்றி சொல்லுங்கள்.
  2. நீங்கள் இந்த துறையை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
  3. உங்களது லட்சியம் என்ன?
  4. எங்கள் நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க என்ன காரணம்?
  5. உங்களுடைய பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?
  6. நீங்கள் சிறப்பாக செய்த காரியம் ஏதேனும் உண்டா?
  7. உங்களுக்குள் உள்ள தனி திறமைகள் என்னென்ன?
  8. உங்களை ஏன் நாங்கள் தேர்வு செய்ய வேண்டும்?
  9. உங்களின் பொழுதுபோக்கு என்ன?
  10. என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?

இவைகள் தவிர்த்து படித்த படிப்பு சம்பந்தமாகவும், அனுபவம் இருப்பின் அது சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்கப்படும்.