பக்ரீத் பண்டிகையின்போது பசுவதை செய்ய வேண்டாம் என்று தெலுங்கானாவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ஐக்கிய முஸ்லிம் கூட்டமைப்பு (யுஎம்எஃப்) வலியுறுத்தியுள்ளது. இதர சமூகத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பக்ரீத் பண்டிகையில், பசு பலியிடுவதை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும். இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். இந்திய சட்டத்தின்படி, ஆடு, போன்ற அனுமதிக்கப்பட்ட பிற விலங்குகளை பலியிடலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையில் பசுக்களுக்கு பதிலாக ஆடுகளை பலியிடலாம் என்று தெலுங்கானா மாநில உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி கடந்த புதன்கிழமை முஸ்லிம்களிடம் கோரிக்கை முன் வைத்திருந்தார்.
அவர் கூறுகையில் ‘ஹிந்து வழிபாட்டின்’ ஓர் அங்கமாக பசு உள்ளது. அதனால், முஸ்லிம் சகோதரர்கள் பசுக்களை பலியிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக ஆடு அல்லது அனுமதிக்கப்பட்ட பிற சிறு விலங்குகளை பலியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.