நோட்டா என்பது- ‘நிற்ப வர்களில் எவரையும் எனக்குப் பிடிக்காது’ என்ற கருத்துள்ளது. பொதுவாக ஜன நாயகத்தில், எப்பொழுதும் இருப்பதில் சிறந்தவரை (Available best) தேர்வு செய்கிறோம்; நூறு சதவீதம் சிறந்தவர் என்பது மிகவும் கடினமான விஷயம்; முயல் கொம்பு போன்ற விஷயம் அது; மகாபாரத காலத்திலிருந்தே இந்நிலைமை கடினமாக இருந் துள்ளது.
பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் மத்தியில் போர் நடக்க உள்ளது, எனவே, யாதவர்கள் யார் பக்கம் இருக்க வேண்டுமென்ற சர்ச்சை நடக்கிறது; சிலர் கௌரவர்கள் பக்கம், சிலர் பாண்டவர்கள் பக்கம் இருந்தனர்; கௌரவர்களின் அதர்மம் பற்றிய சர்ச்சை நடந்த போது, சிலர் பாண்டவர்கள் மட்டும் என்ன யோக்கியர்களா என்ன? அவர்கள் தங்களது மனைவியையே பந்தயம் வைத்தனரே என்றும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இவர்கள் என்ன தர்மம் சார்ந்தவர்களா என்று கேட்டனர்; அப்பொழுது பலராமர் எழுந்து, ‘நீங்கள் எல்லாம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், கிருஷ்ணர் என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும், கிருஷ்ணா, நீ பேசு’ எனக் கூறினார்; பின்னர், கிருஷ்ணர் அரசவையில் பேசினார். அவர், ‘அரசியலில் நூறு சதவீதம் நல்லவர்கள் கிடைப்பது கடினம்’ என்று பேச்சைத் துவக்கினார்; கிடைத்தால் நல்லது தான், தீனதயாள்ஜியைப் போல (இது அவர் கூறியதல்ல, நான் கூறுகிறேன்). எனவே, மக்கள் முன், இருப்பதில் சிறந்தது Available best என்ற ஒரு வாய்ப்புதான் உள்ளது; பாண்டவர்கள் யாதவர்கள் பக்கம் இருக்க வேண்டுமென்ற கருத்தைக் கூறினார்; தற்பொழுது நாம் நோட்டா-வைத் தேர்ந்தெடுத்தால், இந்த இருப்பதில் சிறந்தது (Available best) ஐ ஒதுக்கி விடுகிறோம் எனப் பொருள்; இதன் லாபம் இருப்பதில் மோசமானதுக்குத்தான் Available worst க்குத்தான் கிடைக்கும்; எனினும் தற்போது நோட்டா உள்ளது; எனது கருத்து என்னவெனில் நோட்டா-வை முழுவதும் ஒதுக்கிவிட்டு, இருப்பதில் சிறந்ததன் Available best பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான்.