நூலகத்தின் விதை

சந்தேஷ் என்பது இந்திய கிராமங்களின் வளர்ச்சியில் தொடர்ந்து அக்கறை காட்டி வரும் தன்னார்வ அமைப்பாகும்.
கிராம மக்களின் உடல் நலம், படிப்பு, தொழில் மற்றும் ஆளுமை முன்னேற்றம் இவற்றின் மூலம் சுயசார்பு கொள்ளும் வண்ணம் பன்னெடுங்காலமாக பணியாற்றிவரும் தாபர் (இந்தியா) நிறுவனத்தின் கிளை அமைப்பாகும்.

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஹாப்பர் என்கின்ற ஊரில் நக்லா உதைரம்பூர் கிராமத்தில் பொது நூலகத்தை சந்தோஷ் அமைப்பு  ஏற்படுத்தியது மிகப்பெரிய ஹிட் செய்தியாகி உள்ளது. இங்குள்ள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக போட்டித்தேர்வுகளை எழுதுவதற்கான சரியான உபகரணங்கள் இல்லாமல் அவதிப்பட்டதைக் கண்டறிந்தது சந்தேஷ். தொடக்க நாள் தொடங்கி, இந்த நூலகத்தில் தேனீக்கள் போல் மொய்த்துக்கொண்டு மாணாக்கர்கள் படிக்க ஆரம்பித்துள்ளனர். தங்கள் எதிர்காலம் இந்த நூலகத்தில்தான் என்று கருதியோ என்னவோ, நீண்ட நேரம் உட்கார்ந்து படிப்பது, தேர்வுகளுக்குத் தம்மை தயார் செய்வது என்று நேரம் போவது தெரியவில்ல அவர்களுக்கு. இவர்களது ஆர்வம் கண்ட சந்தேஷ், குழு ரீதியான படிப்பு முறைகளையும் அறிமுகப்படுத்தியது. இந்த வருடத்து தொடக்கத்தில், எழுத்து தேர்வில் 11 மாணவர்கள் தேறியிருக்கின்றனர். இவர்களில், மூன்று மாணவர்கள் தேர்தெடுக்க பட்டுனர்  , ஒருவர் காவலராகவும்,  இருவர் உத்தர பிரதேச போலீஸ் துறையிலும் தேர்தெடுக்க பட்டுள்ளனர். “ பரீட்சை பாஸ் செய்தோம், வேலை கிட்டியது” என்றுதான் நிற்காமல், இந்த இளைஞர்கள் மாத மாதம் இந்த நூலக வளர்ச்சிக்காக குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகின்றனர். தங்களை போல, கிராமத்திலுள்ள இதர மாணாக்கர்களும் போட்டித் தேர்வுகளில் தேறி வீட்டையும், நாட்டையும் வளப்படுத்த வேண்டும் என்கின்ற நல்ல எண்ணமே. சந்தேஷ் அன்று போட்ட நூலக விதை நாடு முழுவதும் பல்வேறு நூலகச் செடிகளாக வளர்ந்து பரவி கிராமங்கள் முன்னேறட்டும்.