காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு சிவசேனை கட்சியின் நிறம் மெல்ல மாறி வருவதை மக்கள் உணராமல் இல்லை. வடமாநிலங்களில் கீதா ஜெயந்தியை முன்னிட்டு பகவத்கீதையை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகள் நடைபெறும். இனி அது போல முஸ்லிம்களின் தொழுகையான அஸானை மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் போட்டிகள் நடத்தப்படும் என சிவசேனா அறிவித்துள்ளது. முன்னதாக அரசு வேலையில் அதிக முஸ்லிம்கள் இடம்பெற அவர்களுக்கு என தனியாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என மகா. அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தங்களின் பாதுகாவலனாக மகாராஷ்டிர ஹிந்துக்கள் ஒரு காலத்தில் நம்பிய சிவசேனாவின் தற்போதைய செயல்பாடுகள் அம்மாநில ஹிந்துக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.