சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கருக்கு இரண்டு இரண்டு ஆயுள் தண்டனை
(50 ஆண்டுகள்) விதிக்கப்பட்டது. அவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. சாவர்க்கருக்கு அப்போது வயது 28 தான்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே அழைத்து வரப்பட்ட சாவர்க்கரிடம் ஒரு வெள்ளை அதிகாரி, மிஸ்டர் சாவர்க்கர், உங்களைப் பிரிட்டிஷ் கவர்ன்மெண்ட் 1960-ல் நிச்சயம் விடுதலை செய்துவிடும்” என்று கிண்டலாகக் கூறினான்.
அதைக் கேட்ட சாவர்க்கர் 1960 வரை உங்கள் ஆட்சி இங்கே நிலைக்கவா போகிறது? பகல் கனவு காண வேண்டாம் நண்பரே!” என்று பட்டென்று பதில் அளித்தார். இதைக்கேட்ட வெள்ளை அதிகாரியின் முகம் சுருங்கியது.
14 ஆண்டுகள் அந்தமான் சிறையிலும் ரத்தினகிரி சிறையிலும் இருந்த பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவரின் நிலத்தை ஆங்கிலேய அரசு கைப்பற்றி இருந்தது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு அவரின் சொத்துக்களை அரசிடமிருந்து திரும்பிப் பெற்றுத் தர சாவர்க்கரின் நண்பர்கள் சிலர் முயன்றனர். முயற்சி பலனளிக்கவில்லை. இதுபற்றி சாவர்க்கரிடம் குறைபட்டுக் கொண்டார் ஒரு நண்பர்.
சாவர்க்கர் சாந்தமாகக் கூறினார் போகிறது விடுங்கள். எனக்கு இமயம் முதல் குமரிவரை பரந்த அன்புக்குரிய ராஷ்ட்ரமே கிடைத்துவிட்டது. இப்போது எனது அந்த சின்னஞ்சிறு நிலத்தைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும்?” என்றார்.