நாசா செல்லும் நாமக்கல் மாணவி

நாமக்கல் நாமக்கல் அடுத்த கருப்பட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாஜலம் சசிகலா தம்பதியின் இரண்டாவது மகள் அபிநயா 14 நாமக்கல் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

அவர் நவம்பரில் சர்வதேச விண்வெளி நிறுவனமான ‘நாசா’ செல்வற்கான ‘கோ 4 குரு’ என்ற ‘ஆன்லைன்’ தேர்வில் பங்கேற்றார். ‘சிறந்த திறனாளர்’ என்ற சான்றிதழ் பெற்றார்.

தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிடுவதற்கான அனுமதி கிடைத்தது. முதல் மூன்று இடங்களில் தேர்வு பெறாததால் சொந்த செலவிலேயே அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்டு அங்கு நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் பிளஸ் 2 முடித்தவுடன் நாசாவுக்குரிய பல்கலையில் இலவச சேர்க்கை கிடைக்கும்.

தொழிலாளியின் மகளான அபிநயா நாசா செல்வதற்கு நிதியுதவி வழங்கும்படி நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நாசா செல்வதற்கான நிதியுதவி வழங்க முன் வந்தார். அதன்படி நேற்று நாமக்கல் வந்த அமைச்சர் தங்கமணி அபிநயா மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து 2 லட்சம் ரூபாய் வழங்கினார்.