திரிபுராவில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு சிலர் லெனின் சிலையை சேதப்படுத்தினார்கள். இதை மையப்படுத்தி, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு. ஹெச். ராஜா, தமிழகத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும், அப்பொழுது, பெரியார் சிலை அப்புறப்படுத்தப்படும் என டுவிட்டரில் பதிவிட்டதாக தகவல் பரவியது. திருப்பத்தூரில் பா.ஜ.க. நகர பொறுப்பாளர் பெரியார் சிலையை சேதப்படுத்தியதாக தகவல். தி.க., தி.மு.க. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி போன்றவை ஆர்பாட்டம் நடத்தின. ஜனநாயகத்தின் காவலராக தங்களை காட்டிக் கொள்ளும் அறிவுஜீவிகளும், ஹிந்து மதத்தை இழிவுப்படுத்தும் விதமாக விமர்சனம் செகிறார்கள்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரை பெரியாராக சித்தரித்து புகழ்பாடுபவர்கள் கழகக் கண்மணிகள், ஆனால் தமிழனைப் பற்றிய பெரியாரின் பார்வை என்ன? தமிழ் மொழியை நான் காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகிறேன். தமிழில் புலவர்களான வித்வான்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு (தமிழருக்கு) நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்கொள்வதால் உனக்கு பாதகம் என்ன?” என்றெல்லாம் தமிழ் மொழியை, தமிழ் புலவர்களை கேவலமாக பேசியவர் ராமசாமி நாயக்கர். இவ்வாறு தமிழை இழிவாக பேசிய பெரியாரின் சிலை அப்புறப்படுத்தப்படும் என கூறியதற்கு, தமிழ் ஆர்வலர்களாக காட்டிக் கொள்ளும் தமிழ் மொழி வியாபாரிகளின் கூச்சல்களில் தேச விரோதம் தலைதூக்கியது.
அடுத்த முதல்வர் நான் என இறுமாப்புடன் வலம் வரும் தி.மு.க.வின் செயல் தலைவர், ஹிந்துக்கள் பெரியார் சிலை மீது கை வைத்தால், ஹிந்துக் கோயில்களை தகர்ப்போம் என சவால் விடுகிறார். ஈழத்தில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த போது, மைய அரசான காங்கிரசுடன் கூடி கும்மாளமிட்ட தி.மு.க. வெட்கம் இல்லாமல் ஹிந்துக் கோயில்களை இடிப்போம் என்கிறார்கள்.
இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே போ வை.கோ. சென்னையிலும், ஈரோட்டிலும் உதிர்த்த ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியாக அவரை காட்டவில்லை. பெரியார் சிலை மீது கை வைத்தாள், கை வைத்தவரின் கையை வெட்டி விடுவோம் என்ற அவரது வன்முறை பேச்சை எவரும் கண்டனம் செயவில்லை. பெரியாரை செருப்பால் அடிப்பேன் என ராஜா கூறிய போதே தமிழகத்தில் நடமாட சிலையை அப்புறப்படுத்துவோம் என்கிறார். அப்பொழுதே அடக்கியிருந்தால், இப்படி பேசமாட்டார் என்கிறார். இதே வை.கோ பாரத பிரதமர் மோடியை செத விமர்சனம் என்ன என்பதை பார்த்தால், அசிங்கமானவர்கள் யார் என்பது நன்கு தெரியும்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் ஸ்ரீரங்கம் கோவில் முன் பெரியார் சிலையை வைக்க அனுமதித்த அரசு எப்படிப்பட்ட அரசு என்பதை கவனிக்க வேண்டும். பிராமண எதிர்ப்பில் கொள்கையற்ற கூட்டத்தினரின் கூச்சலுக்கு அடிபணிவதும், அவர்களை சுற்றி ஆலவட்டம் அடிப்பதும் ஜனநாயகம் என மார்தட்டுபவர்களின் இழிவான செயலாகும்.
ஸ்ரீரங்க நாதரையும் தில்லை நடராஜரையும், பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்னாளோ அந்நாள் தமிழர்களின் நன்னாள் என கூறினால் கருத்து சுதந்திரம்! பெரியாரை அல்லது அண்ணாதுரையை விமர்சனம் செதால், கலவரத்தை தூண்டும் மத வெறியர்கள் என்ற பட்டம்.
ஒருபுறம் ராஜாவின் மீது வசை பாடுவதற்கு பதிலாக, ஹிந்து கோவில்கள் இடிக்கப்படும் என்கிறார்கள். இவர்களின் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டது மனித நேய மக்கள் கட்சி. சிலை வழிபாட்டிற்கு எதிரானது இஸ்லாம் என்று கூறிக் கொண்டு திரியும் கூட்டம் அது. போராட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொண்டது என்ன முறை என தெரியவில்லை.
திரிபுராவில் உள்ளூர் மக்கள் லெனின் சிலையை உடைத்ததால், மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டது. சேதப்படுத்தியவர்கள் இடதுசாரிகள். தோல்வி மேல் தோல்வியை சந்திப்பதால், இந்த பஞ்சமா பாதக செயலை செதிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்கள் ஆட்சியிலிருந்து வெளியேறியவுடன், உலகில் பல நாடுகளில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன. திரிபுராவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் ராஜீவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர் சியாம பிரசாத் முகர்ஜியின் சிலையை நாசமாக்கியவர்கள் காம்ரேட்கள் என்பது தெரிந்தும் அது பற்றி எவரும் வா திறக்க மறுக்கிறார்கள். கருத்து விவாதத்திற்கு மரியாதை கொடுக்கும் ஹிந்துக்கள் மீது தான் அதிக தாக்குதல்கள். அதை காட்ட ஊடகங்களுக்கு தைரியம் கிடையாது. மாறாக மற்றவர்கள் மீது சிறு வார்த்தைகளை பயன்படுத்தினாலும் கூட அதை பூதாகாரமாக பெரிதாக்கி குளிர் காயும் ஊடகங்கள் அடிக்கும் கொட்டம் இது.
திரிபுராவிலும், தமிழகத்திலும் சிலை சேதப்படுத்தப்பட்டது என தகவல் தெரிந்தவுடன், பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதற்கு முன்னர் ஹிந்து சிலைகளை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மைய அரசு உத்தரவிட்ட வரலாறு கிடையாது. பா.ஜ.க.வைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு. அமித்ஷா, மாநில பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உடனடியாக சிலையை சேதப்படுத்திய ஊழியர்களை பாரதிய ஜனதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இது பற்றி எந்த ஊடகமும் கருத்து தெரிவிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என கூக்குரல் எழுப்புகின்றனர்.
ஹிந்து கோயில்களில் உள்ள சிலைகளை அப்புறப்படுத்தி புத்தர் சிலைகளை வைக்க வேண்டும் என கூறிய திருமா, வேறுவிதமாக விளக்கம் ஏற்றுக் கொண்ட புத்திசாலிகள், பெரியார் சிலை விவகாரத்தில் ஹெச். ராஜா வருத்தம் தெரிவித்து, பதிவை நீக்கிய பின்னரும் கூட, பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என போராடுபவர்களின் ஆணவம் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.