ஐநா சபை நவம்பர் 14ம் தேதியை சர்வதேச சர்க்கரை நோயாளிகள் தினம் என்று அறிவிக்கிறது. இந்த நோய் ஒரு தினமாக அறிவிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. காரணம் உலக அளவில் மிக அதிகமான நபர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய வாழ்க்கை முறை தான் இந்த நிலைக்குக் காரணம். இயற்கையோடு இசைந்த வாழ்க்கை முறையை மக்கள் கைவிட்டு விட்டனர். தேவையற்ற அழுத்தங்களை தங்கள் மீது ஏற்றிக் கொண்டுள்ளனர். இதற்கு சிறந்த நிவாரணி நமது நாட்டு யோகா பயிற்சி முறையும் இயற்கை மூலிகைகளும் தான். அதனால் தான் ஐ. நா. சபை ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. முன்பு கொஞ்சம் வயதானவர்களுக்கு மட்டும் தான் இந்த நோயின் தாக்கம் இருந்தது. ஆனால் இன்று பிறந்த குழந்தைகளுக்குக் கூட இந்த நோயின் பாதிப்பு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பயிற்சிக்கு இடமில்லை, மன வலிமைக்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே கிடைக்கிறது. சுயநலமான வாழ்க்கையும் இதற்கு ஒரு காரணம். உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் இன்றைய தலைமுறையினரிடம் இல்லை. அதுவே இப்படிப்பட்ட பாதிப்பிற்கு ஒரு காரணம்.
நமது நாட்டில் நேரு பிறந்த தினமான நவம்பர் 14ம் தேதியை குழந்தைகள் தினம் என்று கொண்டாடுகிறோம். காரணம் குழந்தைகளிடம் அவருக்கு அலாதி பிரியம் என்கின்றனர். உண்மையில் பார்த்தால் ஆயர்பாடி கண்ணன் பிறந்த தினம் தான் நமது நாடு குழந்தைகள் தினமாகக் கொண்டாடப் படவேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரின் பிள்ளைப் பருவ திருவிளையாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. ஹிந்தி மொழியில் சூர்தாசரும், தமிழ் மொழியில் ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், பெரியாழ்வார் போன்றோரும் கண்ணனது பாலலீலையை அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். கண்ணனிடம் ஈர்க்கப்படாத குழந்தை கிடையாது. அதனால் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம் தான் நமக்குக் குழந்தைகள் தினம்.
சாதாரணமாக ஒரு குழந்தையைப் பார்க்கும்போது நாம் கண்ணா/கண்ணம்மா என்று தான் அழைக்கிறோம். குழந்தைக் கடவுள் என்றால் நம் கண்முன் வருவது வெண்ணெய் தின்று கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் உருவம் தான். நமது பாரம்பரியத்தின் அடிப்
படையில் ஒரு நிகழ்ச்சியை அதாவது குழந்தைகள் தினம் என்பது கோகுலாஷ்டமி தினம் தான். இறைவனின் பிரதிபிம்பம். நமக்கு சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ணனே குழந்தை உருவில் உள்ள கடவுள், எனவே கிருஷ்ணஜெயந்தியே நமது குழந்தைகள் தினம்.