காந்தி, நேரு போன்ற தலைவர்களைக் கண்மூடித்தனமாக நம்பிய ஹிந்துக்கள் காங்கிரஸ் பாரதத்தைப் பிரிக்க முடிவெடுத்தபோது எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று நம்பி அதைப் பெரிதாக எதிர்க்கவில்லை.
அது மட்டுமன்றி இப்போதைய பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தங்களுக்கு வரப்போகும் பேராபத்தை உணராதவர்களாக இருந்தனர்.
நெஞ்சு பொறுக்குதில்லையே …..
முஸ்லீம்களுக்கென்று தனி நாடு கேட்டு வலியுறுத்த 1946 ஆகஸ்ட் 16 தினத்தை நேரடி நடவடிக்கை தினமாக ஜின்னா அறிவித்தார். அன்றும் அதைத் தொடர்ந்தும் கல்கத்தாவில் மிகப் பெரிய கலவரம் நடந்தது.. கிட்டத்தட்ட 4000 பேர் உயிரிழந்தனர்; ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நகரத்தை விட்டு வெளியேறினர் ஏராளமான கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன ..
தலைவர்களாம் தலைவர்கள் !
நிலைமை இவ்வாறு இருக்க நாட்டைப் பிரிக்கும்போது பாகிஸ்தான் பகுதியில் வாழ்ந்து வந்த
சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலைமை என்னவாகும் என்பதை அணுவளவும் காங்கிரஸ் தலைவர்கள் யோசித்துப் பார்க்கவில்லை.
அவர்களது பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. அடிப்படை அறிவுள்ள , மக்கள் மீது கரிசனம் உள்ள எந்தத் தலைவனும் நாட்டைப் பிரிப்பதற்கு முன் அவர்களுக்கான ஒரு பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பான் . ஆனால் சிறிதும் யோசனை இன்றி அவசர அவசரமாகப் பிரிவினையை அறிவித்து அதனால் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உயிரிழக்கவும், லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக இந்தியாவுக்கு ஓடிவரவும், தாக்குதலுக்கு ஆளாகவும், பெண்கள் மானபங்கபடுத்தப்படவும் காங்கிரஸ் தலைவர்கள் காரணமாக இருந்தனர். நேருவுக்கு தான் பிரதமர் நாற்காலியில் உட்கார வேண்டும் என்று அவ்வளவு ஆசை !அவ்வளவு அவசரம்!
இது கட்சி , இவர் தலைவர் !
காஷ்மீர் தொடர்பான 370 சட்டப்பிரிவை நீக்குவதற்கு முன் மத்திய பாஜக அரசும் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் எடுத்த மிகச் சாதுர்யமான ,ரகசிய நடவடிக்கைகளை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் வன்முறை மற்றும் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது.
இதுவே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி மற்றும் தலைவர்களுக்கும், மக்களைக் கிள்ளுக் கீரையாக நினைக்கும் பதவி வெறி கொண்ட தலைவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.
இப்படியெல்லாம் நாட்டையும் மக்களையும் சீரழித்த காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களுக்கு பாஜக மற்றும் அதன் தலைவர்களைப் பற்றி பேச என்ன அருகதை உள்ளது? – இரா.ஸ்ரீதரன்