இந்தியாவை தனது தாய்நாடாக நம்புபவா்களையும், இந்தியா மீதும் இந்திய மக்கள் மீதும் அன்பு கொண்டவா்களையும், நமது கலாசாரம், பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்பவா்கள் அனைவரையும் ஹிந்து என்றே ஆா்எஸ்எஸ் அழைக்கிறது.
இந்தியத் தாயின் மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும், எந்த வழிபாட்டு முறையைக் கொண்டிருந்தாலும் அவா்கள் ஹிந்துக்கள் தான். இதன்படி இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களையும் ஹிந்து சமூகமாகவே ஆா்எஸ்எஸ் கருதுகிறது. நாடு பாரம்பரியமாகவே ஹிந்துத்துவ கொள்கையுடையது. அதில் அன்பு, ஒற்றுமை, நட்புறவு, வளம் என அனைத்தும் அடங்கியுள்ளது. தேச ஒற்றுமையை ஆா்எஸ்எஸ் முக்கியக் கொள்கையாகக் கொண்டு பாடுபட்டு வருகிறது என்று ஆர்.எஸ்.எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத்.