நதியில் தவழும் நீர் விமானங்கள்

நிலத்திலும் நீரிலும்  தரையிறங்கும் திறனுடைய கடல் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கொஸ்ட் ஏர்கிராப்ட் நிறுவனத்தின்  கடல் விமானங்களை இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மோடியின் பாஜக அரசு உருவாக்க இருக்கிறது.இப்பொழுது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு கடல் விமானத்தை வாங்கியுள்ளது.

இந்த கடல் விமானத்தின் சோதனை ஓட்டமாக கடந்த டிசம்பர் 12 அன்று மோடி பறந்தார். ஆமதாபாத்தில் சபர்மதி ஆற்றில் இருந்து விமானத்தில் ஏறிய மோடி வானில் பறந்தபடி சபர்மதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள தாரோ அணையில் இறங்கி, அம்பாஜியில் இருக்கும் மா அம்பா தேவியை வணங்கி தன்னுடைய பிரச்சாரத்தை நிறைவு செதார். இந்த அம்பாஜி கோயில் 51 சக்திபீடங்களில் ஒன்று. கடல்விமானத்தில் சபர்மதி நதி வழியே பயணம் செதார் பிரதமர். இந்நதி ஆரவல்லி மலைத் தொடரில் இருந்து உற்பத்தியாகி குஜராத்தில் நுழைகிறது. ஒரு காலத்தில் குஜராத்தில் இந்த ஆறு நம்முடைய கூவம் மாதிரி தான் நாறிக்கொண்டு இருந்தது. நகரின் சாக்கடை நீர் மட்டுமின்றி தொழிற்சாலைக் கழிவுகளை கொட்டும் இடமாகவும் இருந்தது ஆமதாபாத்திற்கு  பிழைப்பு தேடி வரும் ஏழை மக்கள் இந்த சபர்மதி ஆற்றின் கரையோரத்தில் தான் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர். மழைக்காலங்களில் மட்டும் தாரோ அணையில் இருந்து வரும்  தண்ணீரினால் இந்த ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்,

பார்த்தார் மோடி. சபர்மதி ஆற்றை உயிர்ப்பிக்க முதலில்அதன் கரையில் இருக்கும் ஏழை மக்களையும் பாதுகாக்கும் வண்ணம் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்து இடம் மாற்றினார். பிறகு சபர்மதி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் வந்துசேராத வண்ணம் மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பிறகு ஆமதாபாத்தில் இருந்து 11 கிலோமீட்டர் நீளத்திற்கு தொடர்ந்து தண்ணீர் நிற்கும் வசதியை ஏற்படுத்தினார். இது எட்டு ஆண்டு காலத் திட்டம்.

அனைத்தையும் திட்டுமிட்டு உருவாக்கிய மோடி சபர்மதி ஆற்றை லண்டன் தேம்ஸ் நதி மாதிரி மாற்றி படகு போக்குவரத்தை உருவாக்கினார். இப்பொழுது சபர்மதி ஆற்றில் இருந்து கடல் விமான சேவையையும் ஆரம்பித்து வைத்துள்ளார். சமீபத்தில் மும்பையில்  கடல் விமான சோதனை ஓட்டத்தை நிதின் கட்கரி துவக்கிவைத்த நிலையில் இன்று மோடி குஜராத்தில் கடல் விமானத்தில் பறக்கிறார்.

சரிப்பா இதனால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை கிடைக்கும் என்று சில அறிவுஜீவிகள் வரிசைக்கட்டி வந்து வாதிட வருவார்கள். அவர்களுக்காக இந்த கடல் விமானத்தைப் பற்றி சில விஷயங்கள் சோல்கிறேன். இந்த கடல் விமானங்கள் மாதிரி 100 கடல் விமானங்களை இந்தியாவே ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உருவாக்க உள்ளது.

10 முதல் 14 இருக்கைகள் கொண்ட சிறிய ரகக் கடல் விமானங்களை உருவாக்கி நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சேவை வழங்க மத்திய அரசு முடிவு செதுள்ளது. இதனால் நீர் வழிப்போக்குவரத்து அதிகரித்து வரும்காலங்களில் சாலை வழி பயன்பாடுகள் குறைந்து, காற்றில் மாசு ஏற்படுவது குறையும். அதோடு நாட்டில் சுற்றுலா துறையும் வளர்ச்சியடையும்.