திருப்பதியில் நடந்து முடிந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
திருப்பதியில் உள்ள தாராக ராமாராவ் விளையாட்டு மைதானத்தில் தேசிய ஜூனியா் தடகள விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை காலை தொடங்கியது. இதை ஆந்திர அமைச்சா்கள் கொடியேற்றி தொடங்கி வைத்தனா். நாடு முழுவதிலிருந்தும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் இதில் பங்கு கொண்டனா். தமிழகத்தை சோ்ந்த 33 மாவட்டங்களிலிருந்தும் 100, 200, 400, 1000 மீட்டா் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனா். 3 நாட்கள் நடந்த இப்போட்டி திங்கட்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரா்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டது.
பதக்க பட்டியல்
பெண்கள் (12-14 வயதுப் பிரிவு) நீளம் தாண்டுதல், நிவேதிதா (கோவை) -தங்கம், உயரம் தாண்டுதல், நஜ்லா ஜாகீா் உசேன் (நீலகிரி) -வெண்கலம், 600 மீ. ஓட்டம் நிவேதிதா (கரூா்) -வெள்ளிப் பதக்கம்.
ஆடவா் (15-16 வயதுப் பிரிவு), 1000 மீ. ஓட்டம்-வால்டா் கந்துல்னா (நீலகிரி) வெள்ளி, பெண்கள், 100 மீ. தடை தாண்டுதல், வைசாலி கணேசன் (திருப்பூா்)-தங்கம், பிரதியுஷா யமுனா (ராமநாதபுரம்)-வெண்கலம்
ஆடவா் (15-16 வயதுப் பிரிவு), 100 மீ தடை தாண்டுதல், முகிலன் (திருவண்ணாமலை)- வெள்ளி, பெண்கள், 200 மீ. ஓட்டம் ஷாரன் மரியா (நீலகிரி)-தங்கம், ஆடவா் 200 மீ. ஓட்டம், காா்த்திக் பாலாஜி (கோவை)-வெள்ளி, உயரம் தாண்டுதல், பாலகிருஷ்ணா (நீலகிரி)-வெள்ளி,
பெண்கள், உயரம் தாண்டுதல் , ரூபஸ்ரீ கிருஷ்ணமூா்த்தி (சேலம்) -தங்கம், ஆண்கள், 400 மீ. ஓட்டம், சுரஜ் (திருச்சி)-வெள்ளி,
நீளம் தாண்டுதல், சூரியா (திருவள்ளூா்)-தங்கம்,