தேசத்தின் நலனே பிரதானம்

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக பாரதம் உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் பாரதம் வாங்கும். உக்ரைன் போரையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை பிறப்பித்து நெருக்கடி அளித்தது. இதனால், ரஷ்யாவுடனான பாரதத்தின் பொருளாதார உறவுக்கும் நெருக்கடி அளிக்கப்பட்டது. எரிசக்தி சந்தைகளில் நிலையான, எரிசக்தியாக மாற்றும் பாரதத்தின் தீர்மானத்தை எந்த வகையிலும் குறைக்க அனுமதிக்காது. பசுமை எரிசக்தியில் வலுப்படுத்தவும் தீவிரப்படுத்தவும் மத்திய அரசு தீர்மானம் செய்துள்ளது. பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரை, மற்ற நாடுகளை விட உள்நாட்டில் விலைகளை உயர்த்த அனுமதிப்பதில்லை. வட அமெரிக்காவில் சுமார் 46 சதவீதம் விலை அதிகரிப்பு இருந்தால், பாரதத்தில் வெறும் 2 சதவீதம் அல்லது அதற்கு மேல் மட்டுமே விலையை உயர்த்த அனுமதிக்கிறோம். சராசரியுடன் ஒப்பிடும்போது பாரதத்தின் தனிநபர் நுகர்வு மூன்றில் ஒருபங்காக உள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில், உலகளாவிய தேவையில் 25 சதவீதம் பாரதத்தில் இருந்து வரும். பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி ஆற்றல் முக்கிய பங்காகும். பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு முடிவு குறித்து, நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கூறினார்.