கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்திற்கு எதிரான ஒரு பெரிய நடவடிக்கையாக, மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவா நாட்டின் அரசு, அந்த்ச நாட்டின் சட்டங்களுக்கு இணங்கத் தவறியதற்காக தெரெசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி நடத்தும் தொண்டு நிறுவனங்களை மூடி அதனை நாட்டைவிட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளது. தெரெசாவின் தொண்டு அமைப்பு, பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் பேரழிவு ஆயுதங்களை பெருக்குவதற்கு நிதியுதவி செய்வது தொடர்பான அரசின் சட்டம் 977க்கு இணங்க தவறிவிட்டது, உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்ட அவர்களின் நிதிநிலை அறிக்கைகள் நாட்டின் சட்டங்களுக்கு உடன்படவில்லை என்று அரசு கூறியுள்ளது. மேலும், நிகரகுவா அரசின் தலைவர் டேனியல் ஒர்டேகா, நாட்டில் சட்டத்தை மீறி இயங்கி வரும் டிரியோமிட்டோ சில்ட்ரன்ஸ் கேர் ஹோம் அசோசியேஷன், மை சைல்டுஹுட் மதர்ஸ் அறக்கட்டளை போன்ற பல்வேறு கத்தோலிக்க அமைப்புகள் உட்பட 100 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மூட முடிவு செய்துள்ளார். நிகரகுவா உள்துறை அமைச்சம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அது கடந்த ஜூலை 7 அன்று நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தெரெசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி அசோசியேஷன் தொண்டு நிறுவனம், பாரதத்திலும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குர்றம் சாட்டப்படுகிறது. இந்த நிறுவனத்தின் மீது பல வழக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.