பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
குவளைச் செடிகளில் மலர்ந்துள்ள கருமையான மலர்கள் நிறைந்திருப்பதாலும், செந்தாமரைப் பூக்கள் நிறைந்து காணப்படுவதாலுmம், நீர்ப் பறவைகள் எங்கும் காணப்படுவதாலும், பாம்புகள் திரிந்து கொண்டிருப்பதாலும், தங்கள் அழுக்கை நீக்கும்பொருட்டு வந்துள்ள மக்கள் நிறைந்து இருப்பதாலும் இந்த நீர் நிறைந்த குளமானது எம் தலைவனான சிவனும், தலைவியான உமையும் போலவே காட்சி அளிக்கிறது.
இத்தகைய பொய்கை குளத்தில் ] .குதித்து, இங்கும் அங்கும் தாவிப் பாய்ந்து, கை வளையல்கள் ஒலியெழுப்ப, காலில் அணிந்த சிலம்புகள் ஒலியெழுப்ப, நீர் க்ரீடையால் நம் கொங்கைகள் பருக்க [ நம் விளையாட்டால் ]. குளத்தின் நீர் மேலெழும்ப, தாமரை மலர்கள் நிறைந்த குளத்தில் குதித்து நீராடி மகிழ்வோம்.
குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடலின் சதைப் பகுதிகள் இறுக்கம் அடையும்,
ஒரு குளமானது தன்னைத் தேடி வந்தவர்களின் அழுக்குகளை நீக்கிக் களைவதுபோல, இறைவனும் தன்னை எண்ணி இறைஞ்சி நிற்பவரின் ஆணவ / பாவ அழுக்குகளை நீக்குகிறான்.