ஆண்டாளும் அவர் தோழிகளும் விண்ணப்பித்தபடி, காவலன் நந்தகோபாலனின் அரண்மனை வாசல் கதவை திறந்தாயிற்று. தோழிகள் மகிழ்ச்சி கொண்டாயிற்று. உள்ளே சென்று நந்தகோபாலன்,யசோதை, கண்ணன், பலராமன் அனைவரையும் துயில் எழுப்ப முயல்கிறார்கள்.
“உடுக்க உடை, தண்ணீர், உண்ண உணவு ஆகியவற்றைத் தேவையான அளவுக்குத் தானம் செய்யும் எங்கள் தலைவா. நந்தகோபாலா! நம் ஆயர்குலம் செழிக்க வந்த குலவிளக்கே! யசோதைத் தாயே! விண்ணுக்குள் ஊடுருவி அதைக் கிழித்து, தன் திருவடிகளை ஓங்கி உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியான கண்ணனும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்குத் தரிசனம் தர வேண்டுமே!”என்கின்றனர்.