மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைக்கு ரூ. 11 லட்சம் பரிசு வழங்குவேன் என கடந்த 2017ல் கூறியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் தலைவர் யோகேஷ் வர்ஷ்னியை கைது செய்ய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சி.ஐ.டி காவல்துறையினர் குழு செப்டம்பர் 17ல் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் மாவட்டம் சென்றது. வீட்டில் அவர் இல்லாததால், வீட்டை சோதனையிடுவதாகக் கூறி அவர் வீட்டின் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சித்தனர் அந்த காவல்துறையினர். விவரம் அறிந்து அங்கு வந்த பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் அந்த 4 காவல் அதிகாரிகளையும் வீட்டில் அடைத்து வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் உ.பி காவல்துறையினர் வந்து அவர்களை மீட்டுச் சென்றனர்.