தலைமறைவான பாதிரி

ஒடிசாவில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பலங்கிர் பகுதியில் இரண்டு நாட்கள் மாபெரும் மதமாற்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார் கிறிஸ்தவ பாதிரி பஜிந்தர் சிங். இவர் மீது கலிங்க உரிமைகள் மன்றம் உட்பட பல ஹிந்து அமைப்புகள் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தில் புகார் அளித்திருந்தன. மேலும், பஜிந்தர் சிங்கின் மதமாற்றத் திட்டத்தை ஏற்பாடு செய்ய உதவிய பலங்கிரின் துணை ஆட்சியர், அதனை தடுக்க மறுத்த துணை கண்காணிப்பாளருக்கு எதிராகவும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆணையம், அம்மாவட்ட ஆட்சியரிடம், பஜிந்தர் சிங், துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளருக்கு எதிராக ஒடிசா மத சுதந்திரச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இதனையடுத்து பாதிரி பஜிந்தர் சிங் தலைமறைவானார்.