ஜார்கண்டில் வாழும் சர்னா எனப்படும் மலைவாழ் மக்கள் ஹிந்து வாழ்க்கைமுறையை கடைபிடிப்பவர்கள். நீர், காடு, நிலம் என இயற்கையை வணங்குபவர்கள். இவர்களை தனி மதப்பிரிவாக அங்கீகரிக்க சிபுசோரனின் தலைமையிலான ஜார்கண்ட் அரசு முடிவெடுத்துள்ளது. அவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களும் அரசின் புள்ளிவிவர கணக்குகளில் இடம்பெற வேண்டும் என்று இதற்கு காரணம் கூறப்பட்டது.
ஆனால் இவர்களுக்கு கிறிஸ்தவத்திற்கு மாறினால் இரட்டை சலுகை கிடைக்கும் என்று ஆசை காட்டப்படுகிறது. எனவே, அரசின் இந்த முயற்சி, அவர்களை மதம் மாற்றவே செய்யப்படுவதாக கருத வேண்டியுள்ளது.