ஜல்லிக்கட்டைபோல் ‘கிடா முட்டு’ சண்டைக்கும் தடை நீக்கப்படுமா?

ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக தென் தமிழக கிராமங்களில் நடத் தப்படும் ‘கிடா முட்டு’ சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டு செம்மறி ஆட்டு இனங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் 2 ஆயிரம் ‘கிடா முட்டு’ சண்டை நாட்டு கிடாக்கள் வளர்க்கப்படுகின்றன. மதுரையில் ‘கிடா முட்டு’ சண்டை நடக்காவிட்டாலும் திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட கிராமங் களில் நடக்கும் சண்டைகளுக்கு இந்தக் கிடாக்களை அதன் உரிமை யாளர்கள் அழைத்துச் சென்று இந்த விளையாட்டை அழியாமல் உயிர்ப்புடன் வைத்துள்ளனர்.

‘கிடா முட்டுக்கும்’ நெடிய வரலாறு உண்டு. கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. முன்னோர், கிடாக்களை சண்டைக்குவிட்டதில் ஓர் அறிவியல் உள்ளது. நாட்டு செம்மறி ஆடுகளை வளர்க்கும் விவசாயக் குடிகள், அதில் வீரிய மிக்க நாட்டு கிடாக்களைத் தேர்ந் தெடுத்து மோத விடுவார்கள். வெற்றிபெறும் காளைகளை இனப் பெருக்கத்துக்குப் பயன்படுத்து கிறார்கள். நாட்டு கிடாக்களில் கமுதி, கம்பம், எட்டயபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைகட்டி கருப்புக் கிடா, ராமநாதபுரம் கண் கருப்புக் கிடா முக்கியமானவை.

போர்களில் மன்னர்கள், கிடா படையையும் பயன்படுத்தினர். நாட்டு மாடு, சேவல், ஆடுகளாக இருக்கட்டும் வீரியமிக்க நாட்டு இனங்களுக்கும், வீரக் கலைகளுக் கும் விதைக்களம் மதுரைதான். ஒரு மரம் எங்கு முளைக்கிறதோ அங்கு அந்த வேரைப் பிடுங்கினால் அந்த மரம் அழிந்துவிடும். அந்த அடிப்படையில்தான் திட்டமிட்டே மதுரையில் கிடாச் சண்டை தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் கிடா சண்டை நிறுத் தப்பட்டதால் வீரியமிக்க கிடாக் களைக் கண்டறிய முடியாமல் நாட்டு செம்மறி ஆட்டு இனங்களில் நோய் வாய்ப்பட்ட இனங்கள் உரு வாகும் அபாயம் உள்ளது. தற் போது கச்சை கட்டி என்ற நாட்டு செம்மறி ஆடுகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. கீழக் கரிசல், செங்கிடா மிக அரிதாகவே உள்ளன. பொட்டு இனம் அழிவை நோக்கிச் செல் கிறது. அழிவைத் தடுக்க கிடா சண் டைகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.