சூரிய ஆற்றலில் இயங்கும் தானியங்கி கண்காணிப்பு படகு ஒன்றை சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதில் 360 டிகிரி சுழலும் காமிரா, இருப்பிடத்தை கண்டறியும் வசதி, எக்கோ சவுண்ட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. சமீபத்தில் காமராஜர் துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் இது வெற்றிகரமாக செயல்பட்டது.
இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இது அமையும் என ஆராய்ச்சி குழு பேராசிரியர் முரளி தெரிவித்துள்ளார்.