அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் முன்னாள் நீதிபதி கலையரசன் ஆணையத்திற்கு, அண்ணா பல்கலை பேராசிரியர் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், அரசியல்வாதிகளின் ஆதிக்கம், மதிப்பெண்களுக்கு பணம், இடைத்தரகர்கள் தலையீடு, லஞ்ச ஊழல்கள், பதவிகள் விலைக்கு விற்பனை போன்றவற்றை துணைவேந்தர் சூரப்பாவின் நிர்வாகம் ஒழித்துக் கட்டியது. ஆடம்பர செலவுகள் குறைப்பு, மாணவர்களுக்கு உண்மையான தங்க பதக்கம் வழங்குதல் போன்ற நல்ல முயற்சிகள் நடந்துள்ளன. பிஎச்.டி. படிப்பிற்கான தரம் உயர்ந்துள்ளது. ‘கேட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏ.ஐ.சி.டி.இ, என்.பி.ஏ. அங்கீகாரங்கள் பெறப்பட்டுள்ளன என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.