இன்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக பார்க்கப்படும் சுவாமி விவேகானந்தர். இந்தியா மட்டுமல்ல மேலைநாடுகளிலும், அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார் சுவாமி ஜ.
குறிப்பாக 1893ம் ஆண்டு, செப்., 11ம் தேதி அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக சமயங்களின் பார்லிமென்ட் சொற்பொழிவில் இவர் ஆற்றிய உரை யாராலும் மறக்க முடியாது. தனது உரையை, ”எனது அருமை அமெரிக்க சகோதர, சகோதரிகளே” என்று தான் ஆரம்பித்தார். தொடர்ந்து அவர் பேசிய சொற்பொழிவுகள் கேட்டு அன்றைக்கு அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வாயடைத்து போனார்கள். யார் இந்த இளைஞர் என அன்று இந்தியாவை உலக நாடுகள் திரும்பி பார்த்தன.
127 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் பேசிய உரையை டுவிட்டர் தளவாசிகள் டிரெண்டிங்கில் கொண்டு வந்தனர். #VivekanandInChicago, #SwamiVivekananda ஆகிய ஹேஷ்டாக்குகள் டிரெண்டிங்கில் 10 இடத்திற்குள் இருந்தன.