சுய உதவிக் குழுக்கள்

பல மாவட்டங்களில் ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினராகக் கொண்ட குறைந்த பட்சம் 15 பேர் அடங்கிய சுயஉதவிக் குழுக்கள் தொடங்க உதவிகள் செய்யப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் மட்டும் 5 சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அரசு நலதிட்ட உதவிகள் பெற்று தருவது:

பல மாற்றுத்திறனாளிகள் தங்களை மாற்றுத்திறனாளிகள் என பதிவு செய்யாமலே உள்ளனர். அவர்களைக் கண்டறிந்து தேசிய அடையாள அட்டை பெற்று தருவது, இலவச பஸ் பாஸ், ரயில் பாஸ், வருமான வரி விலக்கு, அரசாங்க ஊழியருக்கு தொழில் வரி விலக்கு, போக்குவரத்து படி

போன்றவை பெற்று தருவது சக்ஷம் செய்யும் முக்கியப் பணி. மேலும் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்தின் மூலம் வீல்சேர், மூன்று சக்கர வண்டி, காதுகருவி, கிரச்சஸ், வாக்கர், தையல் இயந்திரம் போன்றவை பெறுவதற்கான வழிமுறைகள் சொல்லி தரப்படுகின்றன.

செயற்கை கால் வழங்கும் பணி:

அகர்வால் அறக்கட்டளை மூலம் சக்ஷம் – தக்ஷிண் தமிழ்நாடு மாபெரும் புரட்சியினை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு காரணங்களால் தங்கள் கால்களை இழந்து மிகவும் வறுமை நிலையில் நடக்கமுடியாமல் வீட்டில் முடங்கி உள்ள மாற்றுத்திறனாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு செயற்கைக் கால்களை வழங்கி நடைப்பயிற்சி கொடுத்து அவர்களும் சராசரி மனிதர்களை போல் பல்வேறு இடங்களுக்கு சென்று பணி செய்து வாழ்வாதாரம் முன்னேற உதவி செய்கிறது. மாநிலம் முழுவதுமாக இதுவரை 2000க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கப்பட்டுள்ளன.

கண்பார்வை அற்றவர்களுக்கு :

கண்பார்வை இழந்தவர்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்படுகிறது. அக்டோபர் 15, 2016 அன்று அகில உலக வெண்கோல் தினம் மதுரை எட்வர்ட் விக்டோரியா மன்றத்தில் நடைப்பெற்றது. அதில் 200 க்கும் அதிகமான பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர். அதில் 150 பேருக்கு இலவச வெண்கோல் வழங்கப்பட்டது. மேலும் கண்பார்வையின்மை இல்லா பாரதத்தை 2018ம் ஆண்டுக்குள் உருவாக்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு சக்ஷம் செயல்படுகிறது. இதனால் பல மாவட்டங்களில் கண்தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பகுதிதோறும் ‘கண்தான கவுன்சிலர்’ நியமிக்கும் திட்டமும் (இஅ–ஆஅ) துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 நபரிடம் இருந்து அவர்கள் கண் தானம் செய்ய தயார் என்ற கண்தான படிவம் பெற்று சக்ஷம் மாவட்ட பொறுப்பாளர்களிடம் வழங்கினால் அவர் ஒரு கண் தான கவுன்சிலராக நியமிக்கப்படுவார். அவருக்கு இஅ–ஆஅ

இணிதணஞிடிடூணிணூ அடையாள அட்டை வழங்கப்படும். அவர் தம் பகுதியில் யாராவது இறைவனடி சேர்ந்து விட்டால் உடனடியாக அங்கு சென்று கண் தான விழிப்புணர்வு ஏற்படுத்தி கண் தானம் செய்ய ஏற்பாடு செய்வார்.

சக்ஷமின் பிற பணிகள் :

* தொழுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

* நடக்க முடியாமல் வீட்டில் முடங்கி உள்ள மாற்றுத்திறனாளர்களை கண்டறிந்து அவர்கள் திறமைக்கு தக்க பணி வழங்கப்படுகிறது. அவர்கள் வெளியில் சென்று வர மூன்று சக்கர பைக் ஓட்டும் பயிற்ச்சி கொடுத்து பழைய, புதிய பைக்குகளை மூன்று சக்கரங்கள் அமைத்து மாற்றுத்திறனாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுவரை சுமார் 30 பேருக்கு பைக் வழங்கப்பட்டுள்ளது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில், மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் சக்ஷம் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றது.

நன்கொடை:

குமரி மாவட்டத்தில் சக்ஷம் பணிகளை பார்வையிட்ட மாதாஜி ஓம்பிரகாஷ் யோகினி அவர்கள் கன்னியாகுமரி மயிலாடி அருகிலுள்ள தேவேந்திரன் பொற்றை என்ற இடத்தில 40 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கினார்கள். அந்த இடத்தில மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சி மையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சக்ஷம் தமிழ்நாடு பல மாவட்டங்களில் கமிட்டி அமைத்து பல நல்ல உள்ளங்களின் உதவியால் மாற்றுதிறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

தொடர்புக்கு:

மாநில செயலாளர்:
ஆர். வேலுமயில்- 9442305750
மாநில தலைவர்:
எஸ். கோவிந்தராஜ் – 9444201515
அமைப்புச் செயலாளர்:
ஏ.கே. ராமன் – 94434 76005

 

 

மாற்றுத் திறனாளிகள் சேவையில்
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்

கன்யாகுமரி மாவட்டத்தில் 2014ல் நடைபெற்ற ‘சக்ஷம்’ முதல் மாவட்ட மாநாட்டில் 7 புதிய பைக்குகள் உட்பட 6 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இரண்டாவது மாவட்ட மாநாட்டில் 11 பைக் உட்பட 10 லட்ச ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார்.

இரணியல் பகுதியில் மாற்றுத்திறனாளர்கள் பயிற்சி மையம் கட்ட 10 லட்ச ரூபாய் உதவி வழங்கியுள்ளார்.

முஞ்சிறையில் நடைபெற்ற சூர்தாஸ் ஜெயந்தி விழாவிலும், மண்டைக்காடு மாற்றுத்திறனாளர் சேவை மைய துவக்க விழாவிலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சக்கர நாற்காலியில் சுழலும் தன்னம்பிக்கை

வைரஸ் காய்ச்சலால் தனது இரண்டு கால்களையும் இழந்த மருத்துவர்

ஈணூ. ஆறுமுகம், – . தன் குடும்பத்தினரின் அரவணைப்பாலும், சக்ஷம் வழிகாட்டுதலாலும் நோயாளிகளின் நம்பிக்கையாலும் மீண்டு வந்து சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் மூளை நரம்பியல் நிபுணர். நர்சிங் கல்லூரி, நர்சிங் பள்ளி ஆகியவை அமைத்து ஏழை மாணவ மாணவிகளிடம் சொற்ப கட்டணம் பெறுகிறார். மாநில அரசின் சிறந்த சேவைக்கான விருது, ஹெலன் கெல்லர் விருது என பல விருதுகளை பெற்றுள்ளார். சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் தேசிய அறக்கட்டளை உறுப்பினராக இவரை மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் ‘சக்ஷம்’ கன்னியாகுமரி மாவட்ட புரவலராக உள்ளார். இவரது தந்தையார் பழனியாண்டி சங்க ஆதரவாளர்.
மாற்றுத்திறனாளிகளுக்காக மனமுவந்த காணிக்கைகள்

குமரி மாவட்டம் இரணியல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் மத்திய இணை அமைச்சர்

பொன். ராதாகிருஷ்ணன் சக்ஷம் வேண்டுகோளுக்கு இணங்கி மாற்றுத்திறனாளர் பயிற்சிக்கூடம் கட்ட 10 லட்ச ரூபாய் நிதி வழங்கினார். ஆனால் அந்த இடத்தில் கட்டிடம் கட்டக்கூடாது என மாற்று சிந்தனை கொண்ட பலர் தடுக்க முயற்சி எடுத்தனர். இதை அறிந்து மாற்றுத்திறனாளர்கள் மிகுந்த மன வேதனை அடைந்தனர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் சென்று விடுமோ என எண்ணி கலங்கி நின்றபோது, அந்தப் பகுதியில் வசித்து வரும் திருமதி அம்பிகா நமசிவாயம் பிள்ளை, அவரது கணவர் காலமாகி பத்து நாட்களே ஆன துயரமான நிலையிலும், 2லீ சென்ட் என்ன 4 சென்ட் நிலம் நான் தருகிறேன், மாற்றுத்திறனாளர்களுக்கு மிக சிறப்பான கட்டிடத்தை காட்டுங்கள் எனக் கூறி, உடனே சக்ஷம் பெயரில் பத்திரப் பதிவும் செய்து தந்து விட்டார். கட்டிடப் பணியும் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. (இடத்தை வழங்கிய திருமதி அம்பிகா நமசிவாயம் பிள்ளை அவர்கள் ஸ்ரீலங்கா பிரச்சாரக் அமரர் ஸ்ரீரமேஷ் பாபுஜி அவர்களின் தாயார்).

மேலும் இந்த இடத்திற்கு வந்துசேர சற்று சுற்றி வர வேண்டியிருந்தது. இதைப் பார்த்த இரணியல் கோணம் பகுதியை சேர்ந்த தேச பக்தியும், தெய்வ பக்தியும் தயாளகுணமும் கொண்ட வி. கிருஷ்ணமூர்த்தி இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது இடத்தை சக்ஷம் மாற்றுத்திறனாளர்களின் வழிப்பாதைக்காக தானமாக தந்து விட்டார். கன்யாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளர்கள் மாவட்ட அலுவலக கட்டிடம் மிக சிறப்பாக

ஸ்ரீ ரமேஷ் பாபு நினைவு இல்லமாக உருவாகி வருகிறது.

2 thoughts on “சுய உதவிக் குழுக்கள்

  1. வீரபாகுஜி மற்றும் சுந்தர்ஜி அவர்களுக்கு நமஸ்தே.

    நான் ராமகிருஷ்ணன், முன்னாள் மதுராந்தகம் பிரச்சாரக், முன்னாள் விஜயபாரதம் கம்யூட்டர் ஆப்ரேட்டர்.

    ஜி, சென்ற வாரம் ஊத்துக்கோட்டை அருகில் உள்ள ஒரு விவசாயியை சந்திக்க சென்றிருந்தேன்

    அவர் குறித்த தகவல் கீழே

    சமீபத்தில் நான் இயற்கை விவசாயம் செய்யும் ஒருவரை சந்திக்க ஊத்துகோட்டை அருகே உள்ள அவர் தங்கி விவசாயம் செய்யும் பகுதிக்கு சென்று அவரை சந்தித்தேன். அவர் ஒரு பெண். கணவர் கனடாவில் உள்ளார். ஆனால் அவர் கழுத்திலோ ருத்ராசம். செய்வது விவசாயம். தனி ஒரு பெண்ணாக அங்கேயே குடிசை போட்டு தங்கி விவசாயம் செய்கிறார். பசு மாடுகள் வதைப்பதற்காக வாகனங்களில் எடுத்து செல்வதை கண்டால் உடனே டாடா ஏசி வண்டியை தானே ஓட்டி சென்று அந்த மாடுகளை விலைக்கு வாங்கி கிராம மக்களுக்கு இலவசமாக கொடுத்து விடுகிறார். இப்படி அந்த கிராமத்தில் அவர் கொடுத்திருக்கும் மாடுகள் மொத்தம் 300. நம்ப முடிகிறதா. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி விவசாயமும் விவசாயியும் உயிர் துறந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவரின் நெல்மணிகள் மட்டும் காற்றில் சிறகடித்து பச்சை சிரிப்பு சிரிக்கின்றன. ஏன் தெரியுமா. பஞ்சகவ்யம் என்றழைக்கப்படும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் இவற்றால் ஆன உரம் கொண்டே விவசாயம் செய்கிறார். தற்போது பத்து ஏக்கரில் தண்ணீர் பற்றாகுறையிலும் அருமையான விவசாயம்.ஆரம்பத்தில் அந்த கிராம மக்களால் பைத்தியக்காரி என உணரப்பட்டவர். எல்லாவற்றுக்கும் மேலாக கெமிக்கல் உர கம்பெனிகள் மற்றும் கிறித்தவ மெசினரிகளின் எதிர்ப்பை அதிகம் எதிர் கொண்டு தனி ஒரு பெண்ணாக களம் காண்கிறார். அவருக்கு பக்க பலமாக ராமகிருஷ்ண மடம் விழங்கிவருகிறது. தற்போது என் மூலமாக நம் சங்கத்தின் சங்க சாலக் குமாரசாமிஜி அவர்களின் அறிமுகம் மூலம் நம் பசு பாதுகாப்பு மையம் மற்றும் கோசாலா அமைப்பினரின் தொடர்பு உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களை போன்ற மனிதர்களால் நம் விவசாயம் வெற்றி பெறும். பசுக்களும் காளைகளும் பாதுக்காக்கப்படும். இவர்களே வெற்றியாளர்கள். .

    என்னுடைய தொலைபேசி எண் 9789892346

    Ur Mail id not working i am send this way

  2. ஜி, நமஸ்தே.

    20-1-17 தேதியிட்டு வந்த இயற்கை விவசாயம் உணவுகள் குறித்த தகவல் அருமை. இந்த வித்தியாசமான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

    ராமகிருஷ்ணன்
    9789892346

Comments are closed.