என்னைப் பொறுத்தவரை இப்பொழுதிருப்பது சுதந்திரப் போராட்ட்ட காங்கிரஸ் கிடையாது. அவ்வளவு ஏன், இந்திரா காலத்து காங்கிரஸ் கூட கிடையாது.
2014ல் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத அல்லது காங்கிரசுடன் எந்தவித ‘பூர்வ‘ ஜென்ம தொடர்பும் இல்லாத கட்சியின் ஆதரவோ இல்லாமல் தனிப் பெரும்பான்மையுயைடவன் வந்ததில் இருந்தே காங்கிரசுக்கு தங்களுடைய பாரம்பரிய சொத்து பறிபோய் விட்டதே என்ற கடுப்பு. அதனால் சித்தம் கலங்கி நிற்கிறார்கள். அதுவும் 2019ல் இன்னும் அதிக வலுவுடன் நிலையான ஆட்சி காங்கிரசுக்கு வயிறு எரிகிறது. ஒவ்வொரு வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. 2014-19 கால கட்டத்தில் அந்த கட்சியின் தலைவர்கள் பேசியதை விட்டு விடுவோம். இந்த வருடம் கடந்த 6 மாதங்களில் இவர்கள் உதிர்த்த முத்துக்களை மட்டுமே கவனிப்போம்.
காஷ்மீர் தனி அந்தஸ்து அளித்த ஆர்டிகிள் 370 விலக்கப்படுவது சம்பந்தமான நாடாளுமன்ற (மக்கள் அவை) விவாதத்தில் அக்கட்சியின் பிரதான தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்திரி காஷ்மீர் நம் உள் நாட்டு பிரச்சினை அல்ல; இதற்கு உலக நாடுகளின் கருத்தை அறிய வேண்டும் என்று பிதற்றினார். இவருடைய வாசகங்களைத் தான் அப்படியே பிடித்துக் கொண்டு பாகிஸ்தான் ஐ நாவிற்கு கொண்டு சென்றது. ( பாக் மூக்குடைபட்டது வேறு விஷயம்)
அதே விவகாரத்தில் மாநிலங்கள் அவையில் பொருளாதாரப் புலி நம்மூர் ப சி என்ன பேசினார் ? காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டதைப் போல எந்த மாநிலத்தையும் நீங்கள் பிரிக்கப் போகிறீர்களா? சென்னையில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாட்டையும் இரண்டாகப் பிரிப்பீர்களா? யூனியன் பிரதேசமாக மாநில அந்தஸ்தைக் குறைப்பார்களா? காஷ்மீர் முஸ்லீம் பெரும்பான்மையான மாநிலம் என்பதால்தானே அப்படி செய்தீர்கள், இதுவே ஹிந்து பெரும்பான்மை மாநிலத்தில் முயற்சிப்பீர்களா? அவர் இப்படியெல்லாம் கேட்பதின் நோக்கம் வேறென்ன? பிரிவினை வாத போக்குகளை தூண்டி விடுவது தானே?
ஒரு மாதம் முன்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் அஜித் பவாருடன் சேர்ந்து கொண்டு பா ஜ க ஆட்சி அமைக்க முயற்சித்த போது அதை ஒட்டி ஒரு தொலைகாட்சி விவாதத்தில் பீட்டர் அல்போன்ஸ் சிவ சேனாவை ஆட்சி அமைக்க விடாமல் செய்தது மராட்டியர்களுக்கு எதிராக இரண்டு குஜராத்திகள் செய்த சதி என்று சித்தரித்தார். மராட்டியர்கள் எல்லோரும் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்று தமிழகத்தில் நாம் பார்க்கின்ற ஒரு நேற்று முளைத்த உதிரிக் கட்சித் தலைவரைப் போல பேசினார்.
அக்டோபர்– நவம்பர் மாதங்களில் சீமான் ஒரு கூட்டத்தில் ராஜீவைக் கொன்று புதைத்தோம் என்று ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தினார். அதை பற்றிய தொலைகாட்சி விவாதத்தில் காங்கிரஸ் கட்சிக்காரர் திருச்சி வேலுச்சாமி சீமானைக் கண்டிக்காமல் அவர் பேச்சுக்கு வருந்துகிறேன் என்று சொல்லி நிறுத்திக் கொண்டார். சீமானுக்கும் அவருக்கும் குடும்ப உறவு இருப்பது கட்சி விஸ்வாசத்தையும் மறக்கடிக்கச் செய்கிறது பாருங்கள்.
இறுதியாக சென்ற வாரம் ராகுல் காந்தி ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ‘ ரேப் இன் இந்தியா‘ என்ற பொறுப்பற்ற வாசகம்.
இப்படியாக, பலவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். காங்கிரஸ் கண்ணை மறைக்கும் ஆத்திரம் அறிவை மழுங்கடிக்கச் செய்கிறது.
அதனால் தான் சொல்கிறேன், சீமான் கட்சியின் ‘ தரத்தை ‘ எட்டியிருக்கறது சோனியா சீமாட்டியின் காங்கிரஸ்.