சீன மசூதி சீன பாணியில்தான், அரபு பாணியில் அல்ல!

சியாஸத் என்ற பத்திரிகை தரும் தகவல் (நவம்பர் 28) :

சீன முஸ்லிம்களின் 10வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய சீன மத விவகாரங்களை கவனிக்கும் அமைப்பின் தலைவர், சீனாவின் மத விவகாரங்களில் அரசு தலையிட விரும்பவில்லை. ஆனால் அரசியல், சட்டம், கல்வி ஆகியவற்றில் முஸ்லிம்கள் தலையிட அனுமதிக்க முடியாது” என்று கூறினார். மேலும் மசூதிகள் அனைத்தும் அரேபிய முறையில் இல்லாமல் சீன முறையில் கட்டப்பட வேண்டும்” என்றும் கூறினார். சீன முஸ்லிம்கள் அதிக அளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக புகார் கூறும் சீன அரசு, இதை தடுக்க தங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பாஸ்போர்டை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளது. புது பாஸ்போர்ட்கள் வழங்குவதற்கும் தடை விதித்துள்ளது. இதன்மூலம் முஸ்லிம்கள் வெளிநாடு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் சீன முஸ்லிம்களால் தீவிரவாத அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என்பதால் அவர்களை நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கவேண்டாம் என எல்லையோர காவல் படைக்கு கட்டளையிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஹிந்துக்களின் போராட்டத்திற்கு வெற்றி!
ரோஜ்நாமா  ராஷ்டிரீய  சஹாரா என்ற பத்திரிகை தரும் தகவல் (டிசம்பர் 11) :

இஸ்லாமாபாத்தில் சுமார் 800 ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கென்று ஈமச்சடங்குகள் செய்ய சுடுகாடு இல்லை என்கிறது பாகிஸ்தான் பத்திரிகையான எக்ஸ்பிரஸ் டிரிப்யூன். இதனால் தங்களது இறந்த குடும்பத்தாரின் உடலை முஸ்லிம்கள் போல் புதைக்கும் நிலை உள்ளது.  பாகிஸ்தானில் பிற பகுதிகளில் வாழும் ஹிந்துக்களுக்கும் இந்நிலைதான். தங்கள் சுடுகாடுக்கான நிலங்கள் பறிக்கப்பட்டதாக ஹிந்துக்கள் பல வருடங்களாக பாகிஸ்தான் அரசை குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தான் ஹிந்துக்களுக்காக இஸ்லாமாபாத்தில் ஒரு கோயிலுக்கும் சமூக கூடத்திற்கும் ஹிந்துக்களின் மத வழக்கப்படி இறந்தவர் சடலம் தகனம் செய்ய சுடுகாட்டிற்கும் தேவையான நிலத்தை அந்நாட்டு அரசு  ஒதுக்கியுள்ளது.