பிரபல ஜியோனி எனும் சீன அலைபேசி நிறுவனம், 2018 – 2019 வரை தான் தயாரித்த 2 கோடிக்கும் அதிகமான அலைபேசிகளில் வேண்டுமென்றே ‘டார்க் ஹார்ஸ் பிளாட்பார்ம்’ எனும் செயலி வாயிலாக டிரோஜன் வைரஸை பதித்துள்ளது. இதனால் அவர்கள் பயனாளர்களின் அலைபேசிகளை அனுமதியின்றி இயக்கமுடியும். இதனைக் கொண்டு அந்த நிறுவனம் பலகோடிகளை முறைகேடாக சம்பாதித்துள்ளது. இது குறித்து வந்த தகவலை அடுத்து சீன அரசு விசாரித்து தகவலை உறுதிபடுத்தியுள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த சூ லி, ஜூ யிங், ஜியா ஜெங்குயிங் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. முன்னதாக சீனாவின் ஹியூவை அலைபேசிகள் இதேபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா அதை தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.