சீண்டிப் பார்க்கும் சீனா: பாரத ராஜதந்திரம் ரவுடியை அடக்குகிறது

பாரத சீன எல்லையில் இரு நாடுகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள வாசகங்கள் இவை:

தொன்மையான இரு அண்டை நாட்டு நாகரிகங்கள். வளர்ச்சிப் கூட்டாளிகள்.” பாரத – சீன உறவு எல்லைப் பகுதியில் இணக்கமாக இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். எனவே இந்த வசனங்கள் வெறுமனே பெயரளவுக்கு மட்டுமே சோல்லப்பட்டனவா என்ற சந்தேகம் எழுவது இயற்கை.

சர்ச்சை நாயகன்

எல்லைப் பகுதிகளைச் சோந்தம் கொண்டாடி சர்ச்சை உருவாக்குவதும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் அவ்வப்போது தாற்காலிகச் சாலைகளை அமைப்பதும் சீனாவின் வாடிக்கை.

இம்முறை சீனா வழக்கத்திற்கு மாறாக சிக்கிம் எல்லைப் பகுதியில், பூடானின் டோக்லாம் பீடபூமியில் கட்டுமானப் பணிகளைத் துவக்க இதற்கு எழுத்து பூர்வமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செத பூடான், பாரதத்தின் உதவியையும் நாடியது. எனவே, பாரத ராணுவம் உடனடியாக இதில் தலையிட்டு சாலை அமைக்கும் சீனர்களைத் தடுத்து நிறுத்தியது.

அதில்தான் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. பூடானின் டோக்லாம் பீடபூமியைத் தனதெனச் சோந்தம் கொண்டாடுகிறது சீனா. அப்படியே தனது என்று இல்லா விட்டாலும் பூடான் மண்ணில் கால் பதிக்க பாரதத்திற்கு என்ன உரிமை எனக் கேள்வி எழுப்புகிறது.

சிக்கிம் – பூடான் – திபெத் முச்சந்தி

பாரத நாட்டின் பாதுகாப்பு, போக்குவரத்து என எல்லா விதங்களிலும் மிக முக்கியத்துவம் வாந்த பகுதி தான் பூடானின் டோக்லாம் பீடபூமி. இது சிக்கிம் – திபெத் எல்லைக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது.

சிக்கிம் நமது எல்லைப்புற மாநிலம். பூடான் நம் நட்பு நாடான அண்டை நாடு. தனது பாதுகாப்பை பாரதம் தான் உறுதி செய வேண்டும் என 1949-ல் நம்முடன் ஒப்பந்தம் செது கொண்டது பூடான்.  திபெத் கடந்த 67 ஆண்டு

களாக சீனாவின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

பூடானுக்குச் சோந்தமான ‘டோக்லாம்’ பீடபூமியைத் திபெத்திற்குச் சோந்தமான ‘டோங்லாங்’ என வம்புக்கு வந்ததன் மூலம் சீனா, இந்த முச்சந்திப் பிரச்சனையை நாற்சந்தியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

சோன்னபடி கேட்காத சீனா

ஆங்கிலேயர்களுடன் 1890-ல் ஏற்பட்ட கொல்கத்தா ஒப்பந்தத்தின் படி டோக்லாம் பகுதி திபெத்திற்கு சோந்தம். இன்றோ அந்த திபெத் எனக்குச் சோந்தம் என சீனா வாதிடுகிறது.

ஆனால் அதை மறுக்கும் பூடான், ‘சர்ச்சை தீரும் வரையில் 1959-ல் நிலவிய (இதே) நிலை தொடர்ந்திட வேண்டும்’ என்ற 1998 சீனா – பூடான் ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டுகிறது. 1956-ல் சீனா, டோக்லாம் பகுதிக்குச் சோந்தம் கொண்டாடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. முச்சந்திப் பிரச்சினையை மூவரும், இருதரப்பு விஷயங்களை சம்பந்தப்பட்ட இருவரும் பேசித் தீர்க்க வேண்டும் என்பது சமீப காலத்தில் 2012-ல் எடுத்த முடிவு.

ஆனால் பழைய, புதிய ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறிடும் எதேச்சாதிகார சீனா பூடானின் ஒரு பகுதியை விழுங்கப் பார்க்கிறது. அது அனுமதிக்கப்பட்டால் அடுத்து சீனா ஒட்டு மொத்த பூடானையும் கபளீகரம் செய எத்தனிக்கும்.

விட்டுத் தராத மத்திய அரசு

அண்டை நாடுகளின் இறையாண்மையை ஒரு போதும் மதித்திடாத, அடிக்கடி அத்துமீறும் சீனாவிற்கு பாரதப் படையினர் டோக்லாமில் இருந்து பின்வாங்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

அமைதி திரும்பிட வேண்டுமெனில் இரு நாடுகளும் படைகளைப் பின்வாங்க வேண்டும் என ஜூலை 20 அன்று ராஜ்ய சபாவில்  வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதிபடத் தெரிவித்தார்.

இத்தனை பரபரப்புக்கும் மத்தியில் ஜூலை 27 அன்று  பிரிக்ஸ் (BRICS – Brazil Russia India China South Africa) நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான சந்திப்பு சீனாவில் நடந்தது. நம் நாட்டின் பாதுகாப்புத் துறை முதன்மை ஆலோசகர் அஜித் தோவல் சீனா சென்று வந்தார். இரு தரப்பு விவாதங்களின் விவரம் வெளியாகவில்லை.

குழப்பம் பாதி – பரிதாபம் பாதி

பாரத எல்லைக்குள் சீன ராணுவம் பிரவேசித்ததாகவும் பதுங்கு குழிகள் இரண்டைத் தனது பிரதாபத்தை ஜம்பமடித்தது. அதே நேரம் சீனாவின் கட்டுமானப் பணியை நாம் தடுத்ததாகவும் புலம்புகிறது.

‘ஆக்கிரமிப்பாளர்களின் பக்கம் உலகம் நிற்காது. போர் என வந்தால் உங்கள் படை தாங்காது’ என்றெல்லாம் சீனாவின் கம்யூனிஸ பத்திரிகை ‘குளோபல் டைம்ஸ்’ தனது தலையங்கத்தில் பாரதத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறது.

சீன ராணுவத்தின் 90-ஆவது ஆண்டு அணிவகுப்பில் பேசிய சீன அதிபர் ஜீ ஜின்பிங், பின் வாங்க மாட்டோம்; விட்டுத் தர மாட்டோம்; சீனா அமைதியை விரும்பும் தேசம்” என்கிறார்.

ஜூன் 16-ல் தொடங்கி இன்று வரை டோக்லாம் பதட்டம் தீவிரத் தாக்குதலாக உருப்பெறவில்லை.

ஜூலை 25-ல் மாநில பாரஹோதி எல்லையில் ஊடுருவிய சீனர்கள் 2 மணி நேரத்தில் திரும்பிச் சென்றனர்.

அஜித் தோவல் பிரயாணத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வெளிப்படையான மாற்றம் ஏதும்

நிகழாவிட்டாலும் பதட்டம் கூடவோ, குறையவோ இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிக்கைகள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

இத்தகைய மென்மையான, குழப்பமான போக்கு சீனாவின் நல்லெண்ணத்தைக் காட்டவில்லை, பலகீனத்தைக் காட்டுகிறது.

சீறும், ஆனால் பாயாது என்பதற்கு மேலே சோன்னவற்றைத் தவிர்த்து மேலும் பல காரணங்கள் சோல்லலாம்.

மோடி மந்திரம்

உலக நாடுகளைத் தன் பக்கம் ஈர்க்கும் வித்தையினைத் தெரிந்து வைத்திருக்கிறார் பாரதப் பிரதமர் மோடி. வல்லரசுகள் அனைத்தும் அவரது மந்திரச் சோற்களில் கட்டுண்டு கிடக்கின்றன. உலக அரங்கில் பாரதத்தின் மதிப்பு வெகுவாகக் கூடி இருக்கிறது. தனது வலுவான வெளியுறவுக் கொள்கையினால் பாரதம் தன்னைச் சீராகக் கட்டமைத்திருக்கிறது. ஜனநாயக விரோத கம்யூனிஸம், இதற்கு எதிர் திசையில் பயணிக்கிறது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள இந்த வித்தியாசம் சீனாவுக்கு பலவீனம்.

போர் என்பது ஆயுதங்களால் மட்டுமே அல்ல

சீனப் பொருளாதாரத்தின் முதுகெலும்பே உற்பத்தியும் ஏற்றுமதியும் தான். பாரத நாடு சீனாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்று. அதை இழப்பது தற்கொலைக்குச் சமம்.

அது மட்டுமன்றி, சீனாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் மிகப் பெரிய சவாலைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் சீனா போரைத் துவக்கினால் உலக நாடுகளால் விதிக்கப்படும் பொருளாதாரத் தடையை அதனால் தாங்க இயலாது. சீனா மீள முடியாத அதல பாதாளத்திற்குள் வீழ்ந்து, சாகக் கிடக்கும் கம்யூனிஸத்துடன் சேர்ந்து மடிந்து விடும்.

போர் : இருவரிடையே அல்ல; இரு அணிகளுக்கிடையே

இரு நாடுகள் மட்டுமே போர் புரியும் என எதிர்பார்ப்பது அபத்தம். பொதுநலன் கருதியும் தங்கள் பொது எதிரியை வீழ்த்தவும் பிற நாடுகள் அணி சேர்வது இயல்பு.

சீனா கீழ்த் திசையில் ரஷ்யாவையும் தென் கடலோரத்தில் ஜப்பான், வியட்நாம் நாடுகளையும் நிரந்தரப் பகைவர்களாக சம்பாதித்துள்ளது. சீனாவின் ஆதரவு பெற்ற வட கொரியா, அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளைத் தன் கைவசம் வைத்திருக்கிறது.

எல்லை மீறும் சீனாவுக்கு எதிராகப் பிற உலக நாடுகளும் பாரதத்திற்குத் துணை நிற்கும். 1962 போரின் போது, அமெரிக்காவும் ரஷ்யாவும் கியூபாவில் தான் கவனம் செலுத்தின. ஆனால் இம்முறை நிலைமை வேறு. அதை சீனாவும் உணர்ந்தே இருக்கிறது.

இருந்தாலும் செத்துக் கொண்டிருக்கிற கம்யூனிஸத்துக்கு விசிறி விடவும் உள்நாட்டு மக்களைத் திருப்திப் படுத்தவும் சீன அரசு சீறிக் கொண்டே இருக்கும்.

அதர்மத்தின் பாதையில் சீனா

குருகே்ஷத்ரத்தில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன் சேர்ந்து சீனர்களும் கௌரவ சேனைக்காகப் போரிட்டது வரலாறு. என்றுமே அதர்மத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் சீனர்கள் எத்தனை போர் வந்தாலும் அழிவது உறுதி. தர்மம் வென்றே தீரும்.

இப்படி எத்தனை- காரணிகள் தனக்கு எதிராக இருந்தாலும் நம்மைச் சீண்டித் தான் பார்க்கிறது சீனா. ஆம், புலி வாலைச் சீண்டித் தான் பார்க்கிறது சீனா. அதன் சுபாவம் அப்படி!

 

**********************************************

  • நம் நாட்டில் நிலவும் ஜனநாயகம் சி.ஏ.ஜி அறிக்கையையும் பகிரங்கப் படுத்தும். அசிங்கப்படுத்தும் அரை வேக்காட்டு ஊடகங்களையும் அனுமதிக்கும். கம்யூனிஸ சீனா கட்டுப்பட்டித் தனமானது. அவர்களின் ஆயுத இருப்பு ஊடகங்களில் வராது. உதார் விடும் கம்யூனிசம் சோல்வதை அனைவரும் நம்பித் தான் ஆக வேண்டும்.
  • டோக்லாம் பீடபூமியில் இருந்து பாரதப் படைகள் பின்வாங்கின என 15 பக்க புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது சீனா. ஒற்றை வரியில் மறுத்துள்ளது பாரதம்.
  • சீனக் கட்டமைப்பில் உருவான இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா தனது வணிக நோக்கிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது இலங்கை அரசு. முன்பு சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அங்கு நிலை கொண்டிருந்தது. இனி எக்காரணம் கொண்டும் கொண்டும் சீன ராணுவம் அங்கே நுழைய முடியாது.

**********************************************

 

**********************************************

கண்மூடித்தனமான ஊடகங்கள்: காமாலைக் கண்ணர்கள்!

பாகிஸ்தான், சீனா என இரு பெரும் ஆபத்தான நண்பர்களை அண்டை நாடுகளாகக் கொண்ட பாரதம் எப்போதும் தனது ராணுவத்தைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போர் என வந்தால் சராசரியாக 20 நாட்களுக்காவது நீடிக்கும். அதற்கான ஆயுத பலம் நம்மிடம் உள்ளதா, போதுமான வெடிமருந்துகள் கையிருப்பில் உள்ளனவா என்பனவற்றைக் கணக்கெடுப்பது சிஏஜி பணி. எல்லையில் பதட்டம் நிலவும் சூழலில் ஜூலை 21 அன்று இப்படி ஒரு சிஏஜி அறிக்கை வெளியாவதா?” என்ற கேள்வி அனைவருள்ளும் இயல்பாகவே எழுந்தது. இந்த அறிக்கை மட்டுமன்றிக் குழுவின் வேறுபல அறிக்கைகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது நடைமுறை. சுட்டிக் காட்டப்படும் குறைகள், தயார் நிலை விஷயத்தில் காணப்படும் சுணக்கம் களையப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் ஐயமில்லை. ஆனால் இதைச் சாக்கிட்டு மோடி அரசைக் குறைகூறும் போக்கைக் கடைப்பிடித்த ஊடகங்கள் தங்கள் பொறுப்பற்ற தன்மையை மீண்டும் வெளிப்படுத்தின. ஆயுதங்களைக் கணக்கெடுக்கலாம். நம் படையினரின் தேசபக்தியை அளவிட இயலாது” என்ற சத்தியத்தை ஊடகங்கள் மறந்தன. போர்’ன்னு வந்தா நாம தான் ஜெயிப்போம்! வரட்டும் பார்த்துக்கலாம்!!” விஜயபாரதம் கட்டுரையை வாசித்த திருச்சி கவிஞர் ஒருவர் அலைபேசியில் முழங்கினார். சாமான்யனிடம் காணப்படும் இந்த மனத் துணிவு கூட பெரும்பான்மை ஊடகங்களுக்கு இல்லை என்பது வருந்தத்தக்கது.

**********************************************