சி.எஸ்.ஐ.,க்கு தனி அதிகாரி – அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

மதுரை – ராமநாதபுரம், சி.எஸ்.ஐ., அமைப்பை நிர்வகிக்க, தனி அதிகாரியை நியமிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார், தேவசகாயம் தாக்கல் செய்த மனு: மதுரை – ராமநாதபுரம் திருமண்டல மேலாண்மை சங்கம் – சி.எஸ்.ஐ., மதுரை கிழக்கு வெளி வீதியில் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், ஆதரவற்றோர் காப்பகங்கள், தேவாலயங்கள் உள்ளன.சங்க வரவு – செலவுகளை சரியாக தணிக்கை செய்வதில்லை. வருமானவரி தாக்கல் செய்வதில்லை. சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. சில சொத்துகளை, தவறாக பயன்படுத்துகின்றனர். தேர்தல் நடத்தவில்லை. விதிகள்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கவில்லை. 1994க்கு பின், பொதுக்குழு கூட்டம் நடத்தவில்லை.நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை. சங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக அரசின் பதிவுத் துறை செயலர்,தலைவருக்கு மனு அனுப்பினேன். சங்கம் முறையாக செயல்படவில்லை. சங்கத்தை நிர்வகிக்க, தனி அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார். நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து, பதிவுத் துறை செயலர்,தலைவர், மதுரை மாவட்ட சங்கங்கள் பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஜன., 20க்கு ஒத்திவைத்தார்.